பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அரசு அமர்ந்தது 73 எண்ணி ஏற்ற அரண்களே அமைத்துள்ளோம். இக்க நிலையில் காங்கள் அரசுரிமையை எய்தித் தலைமையாப் கின்ருல் ஒழிய உரிய காரியங்கள் ஒன்றும் சரியாப் முடியாது. அதிகார வுரிமை மனிதனுக்கு அதிசய ஆற்றலை அருளிவருகிறது. நீரில் விரைக்க ஒடுகிற மீன் நிலத்தில் வங்கால் யாதம் ஓடாது; உரிய இடமே யாவர்க்கும் அரிய வலிமையாப் அமைங் தள்ளது. தானத்தின் பலம் வானத்தின் வலம் என்பது சீனக்தின் பழமொழி. 'உடை யவன் இல்லையாயின் ஒரு முழம் கட்டை' என்பது உரியவன் பெருமையை உணர்த்தி திற்கிறது. காங்கள் வந்த கிற்கவில்லை ஆனல் இந்தக் கோட்டை இப்படி முடித்திருக்குமா? பதவியை மேற்கொண்டு அதிபதியாப் கின்ருல் காரியங்கள் யாவும் விதி முறையாப் விரைந்த கடக்கும். அரசுரிமையோடு அமைந்து கிற்கும் தங்கள் தலைமையைக் காணக் குடிசனங்கள் வேணவா வோடு விழைந்து நிற்கின்றனர். இனிய மதியைக் கண்டு கடல் கொந்தளித்தல் போல் உரிய பதியைக் கண்டு படைகள் களிக்க அடலாண்மைகள் புரிகின்றன. உரிமையான தலைவன் எதிரே இல்லையானல் அரிய வலிமைகளும்வறிதே இழிந்து போகின்றன.

  • நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானே

தலைமக்கள் இல்வழி இல்.’ (குறள், 770) என்றது. பெ. ப்யா மொழி. எவ்வளவு பெரிய படைகள் திரண்டிருந்தாலும் படைக் கலைவன் இல்லையானல் அவை பயன் படr என இது உணர்த்தி யுள்ளமையால் கலைமையின் நிலைமை யும் தானேயின் வலிமையும் மானச மருமமும் புலனப் கின்றன. தலைவன் நேரே கின்ருல் படை வீரர்கள் போர் ஏறிப் பொருது வருவர்; இல்லை என்ருல் உறுதி குன்றிப் போவர். மனித சுபாவங்களே அனுபவங்களால் அறிக் து வருகிருேம். மானச தத்துவங்களைச் செப்பவரே எத் திறக் தும் உயர்க்க விளங்குகின்ருர், உறுதியுண்மைகள் வாழ்வின் அனுபவங்களாப் உன வருகின்றன. காங்கள் இங்கு வந்து சேர வில்லையானல்

  • கிலே மக்கள் என்றது படைவீரர்களே. பொருகளத்தில் கிலேயாய் கின்று போர் புரிய வல்லவர் ஆகலால் அங்கிலே தெரிய கிலே மக்கள் என்ருர். தலைமக்கள் என்றது படைத்தலைவரை. உறுதியான போர் வீரர்கள் எவ்வளவு மிகுதியாக இருக்காலும் தமக்குத் தகுதியான தலைவன் ஒருவன் இல்லையால்ை அவர் உரிமையுடன் ஊக்கி கின்று பொாார்; உள்ளம் உடைந்து எள்ளலடைந்த ஒழிவார் என்பதாம்.

10