பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது அதிகாரம். மீ ண் டு போ ன து அரண் வலியும், போர் வீரர்களுடைய அடலாண்மைகளும் கும்பினியாரின் குடல் கலங்கச் செய்தன. ஊமைத்துரையை எளிதாகப் பிடித்துக் கொள்ளலாம் என்று படைகளோடு தொடர்ந்துவந்த சீமைத்துரைகள் கிலைமைகளை நேரே அறிந்ததும் மனமயர்ந்து மீண்டு போக தேர்ந்தனர். தமக்கு மூண்டுள்ள அவமானங்களே நினைக்த நாணினர். திரும்பாமலே முனைந்து போர் தொடங்கலாமா? என்று தலைமைத் தளபதி மறுபடியும் துணிச்து ஆலோசித்தார். மானத் தடிப்போடு பூதக் கண்ணுடி மூலம் மீண்டும் கோட்டையைக் கூர்ந்து கோக்கினர். படை வீரர்கள் அரணேச் சூழ்ந்து வெளியே நெடிய வேல்களோடு அமராட ஆயத்தமாப் கிற்றலேக் கண்டார்; நெடுங் திகில் கொண் டார். பிற்பகல் ஒரு மணிக்குப் பார்த்தார் ஆகலால் வேல்களும் வல்லயங்களும் வாள்களும் வெயிலில் ஒளிவீசிமிளிர்கலே நோக்கி உள்ளம் கலங்கினர்; திரும்பிச் செல்வதே நல்லது என்று தீர்மா னித்தார். ஒல்லையில் மீண்டு போக உறுதியாய் ஊக்கிமூண்டார். முடிவு கொண்டது. இரவு வரையும் ஈண்டுக் காமதித்திருக்கலாகாது; விரைவில் மீண்டு விடவேண்டும் என்றே யாவரும் விரைந்து கின்றனர். முதல் நாள் பகலில் குலையகல்லூர்ப் பக்கம் பாசறையில் காம் பட்டபாட்டை கினைந்த போதெல்லாம் பாஞ்சாலங்குறிச்சிப் படைகளுடைய துணிவும் துடுக்கும் கோபக் கொதிப்புகளும் அவர்க்குக் கொடிய ஆபத்துகளாப் நேரே கெடிது தோன்றின. அன்று அங்கு கின்ருல் அடியோடு அழிக்க படவே சேரும் என்று கன்ருக அறிந்து கொண்டமையால் உடனே பாளையங் கோட்டைக்கே திரும்பிச் செல்லவேண்டும் என ஒருமுடிவாய்க் கடிது தணிந்தார். மீண்டு போக வேண்டும் என்று மூண்டு முனைந்தவர் ஆண்டிருந்து மீள்வதைக் குறித்தப் பின்பு ஆலோ சிக்கலாயினர். சாம் ஒதுங்கி அகல்வதை எதிரிகள் தெரிந்தால் உடனே தொடர்ந்து ஓடிவந்து வளைந்து கொள்வர்; அங்கனம்