பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் நடுவே தொகுத்தனர். பீரங்கிகள் முதலிய யாவும் ஒரங்களாய் உருவாகி கின்றன. ஒட்டத்தில் வல்ல சிப்பாயிகள் குதிரைப் படைகளின் அருகே வரிசை வரிசையாப்ப் பிடித்தவெடிகளோடு கொடுத்த கின்றனர். எல்லாம் ஆயத்தமானவுடன் மெல்லப் பின் வாங்கிப் போகும்படி தலைமைத்தளபதி கட்டளையிட்டார். சுமைகளும் பொதி மாடுகளும் முதலில் நடந்தன. படைகள் அடைவாக அடுத்துச் சென்றன. தளபதிகளும் நடுவே குதிரை களில் போயினர். நேரே போருக்கு வருவதாகப் பாவனை காட்டி முன்னே மூண்டு கின்ற குதிரைப் பட்டாளங்கள் மாத்திரம் பின்னே போக சேர்ந்தன. 2 மணிக்குத் தொடங்கிய ஆயத்தங் கள் ஐக்க மணிக்கு முடிக்கன. முடிவு வினையமான விடிவாயது: m பாஞ்சை வீரர் ஏமாந்து கின்றது. கும்பினிப் படைகள் போருக்கு மூண்டு எழுங்கன என்.று முதலில் இரண்டு மணிக்குத் தெரிந்த வுடனே ஊமைத்துரை படைகளை ஊக்கினர். போர் விரர்கள் யாவரும் நேரே ஆவ லோடு பொங்கி கின்றனர். வேல்களும், வாள்களும், வல்லயங் களும் சூரியன் ஒளியில் பள பன என்று மின்னி விளங்கின. கோட்டை அருகிலும் சம வெளிகளிலும் மதிள்களிலும் கொத்தளங்களிலும் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு இன்று நல்ல வேட்டை வாய்த்தது என்று வேட்கை மீதுளர்ந்து படை விரர்கள் எல்லாரும் முதிர் வேகத்துடன் எதிரிகளை எதிர்பார்த்து கின்றனர். அந்த கிலே வெற்றி வி.அகளோடு விரிந்து கின்றது. படைகள் முன்னேறி வரும் வரும் என்று கருதி கின்ற இவர் எதிரிகளுடைய கால தாமதத்தைக் கண்டதும் சாலவும் திகைத்தார். வஞ்சனை குதுகளை நன்கு தெரியாதவர் ஆதலால் நெஞ்சங்களில் பல பல கினைந்தார். எண்ணிய எண்ணங்கள் இவருடைய கண்ணியங்களை வெண்மையாக் காட்டி கின்றன. 'வெள்ளைக்காரர் மிகவும் தந்திர சாலிகள்; யுத்த முறையில் கன்கு பயிற்சி பெற்றவர்கள்; எங்கும் இதமாய் முயற்சித்து வருபவர் ஆதலால் படைகளை முறைப்படி அணிவகுத்து மேலே கடத்தி வருவார்கள்; வாட்டும் வரட்டும்’ என்று மிகவும் இவர் எதிர்பார்த்து கின்ருர். இவர்களுடைய பார்வைகள் எல்லாம் போர்மேல் மூண்டு கிற்க அவர் புறங்காட்டிப் போவதில் நீண்டு