பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இதேபோல், 1911ல் ஆஷ்துரை கொலையுலன்!.. பின்னர், போலீசார் நடத்திய சோதனைகளின்போது அகப்பட்ட தமிழ் நாட்டு ரகசியச் சங்கத்தின் பிரகடனம், மற்றும் அச்சங்கத்தில் சேர் பவர்கள் செய்துகொண்ட சத்தியப் பிரமாணம் ஆகியவையும், ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்த தமிழ் நாட்டு இளைஞர்களும் தேசபக்தர்களும் விடுதலைப் போர் விரைவில் வெற்றி பெற்றுவிடும். என்றே நம்பியிருந்தனர் என்பதற்குச் சான்று பகர் கின்றன, ஆஷ் கொலை வழக்கில் 'எக்ஸிபிட் 9' (Ext. T. 9} ஆகச் சமர்ப்பிக்கப்பட்ட அந்தப் பிரகடனத்தில், நமது நாட்டில் ஸ்வதேசி யுத்தம் திகாம்பிலிட்ட.து. ஆநந்த வருஷத்திற்குள் வலுத்த யுத்தம் நடத்த வேண்டியது....... ஆரிய வீரர்களே! இனிமேல் தயங்காதீர்கள்! - உங்களுக்கு ஈசுவரன் மங்களத்தைத் தருவாராக! ஜெய பாரத? என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் 'எக்ஸிபிட் 10' (Ext. T, 10) ஆகச் சமர்ப்பிக்கப்பட்ட அபிநவபாரத சமாஜம் என்ற ரகசியச் சிங்கத்தின் சத்தியப் பிரமா6ாத்திலும் , பறங்கி இந்த நாட்டிலிருந்து வருகிற ஆநந்த வருஷத்துக்குள் தொலைந்துவிட வேண்டியது என்று 'பகவத் சங்கல்பம் இருப்பதினாலும், அது காரணம் பற்றி மகரிஷி களும் சித்த புருஷர்களும் இந்த அருங்காட்சியத்தைப் . பின்னிருந்து நடத்திக் கொண்டிருப்பதினாலும், இந்த ஆவேசம் 'சத்துருவின் சூழ்ச்சியினால் அடக்கப்படாமல் காட்டுத் தீபோல் எங்கு பார்த்தாலும் பரவிக்கொண்டு வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது. இதில் குறிப்பிட்டுள்ள 'ஆனந்த வருஷம்' என்பதும் 1914--1915ஆம் ஆண்டு தான். இவ்வாறு பூபேந்திரநாதர் தொடங்கி, சியாம்ஜி கிருஷ்ண வர் (27' , . அரவிந்தர் மற்றும் அபிநவபா ரத சமாஜத்தினர் வரையிலும், இந்தியா சுன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் காலத்தைக் குறித்து ஒரு ஜாதகமே குறித்துக் கொடுத் திருந்தனர். -ஆனால், இந்தியாவில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வீறு பெற்ற புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 1908ஆம் ஆண்டில் வீசிக.! முதல் வெடி குண்டு வீச்சைத் தொடர்த்து' ,. அதாவது. புரட்சி இயக்கத்தில் ப 12:35ங்கரவாதம், தலைதூக்கிய பிறகு, புரட்சி இயக்கமும் சரி, தீவிரத் தேசியவாத இயக்கமும் எவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்டன, தீவிரத் தேசியவாத இயக்கமே எவ்வாறு நிலைகுலைந்து 1911 ஆம் ஆண்டுவாக்கில் செயலிழந்து முடிவு கண்டுவிட்டது என்பதை முந்திய சொற்பொழிவின்போது குறிப்பிட்டோம். இதனால் இந்தியா,