பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> என்ற நோக்கிலிருந்து பார்க்கும்போது, இந்தப் புத்தகங்களால் எனக்கு அநேக 1மாக எந்த லாபமுமே கிடையாது. பிரிட்டிஷ் இந்தி யாவில் நமக்கு எஞ்சியபுள்ள அற்ப சொற்பமான எழுத்துச் சுதந் திரத்தின் நலன்களுக்காகவே இதளைக் கோருகிறேன், சந்தேகத்துக் குரிய நபர் ஒருவரது பேனாவிலிருந்து பிறந்த காரணத்துக்காக. நீங்கள் காதல் கவிதைகளைய, நம் சமூகச் சீர்திருத்தக் கதைகளையும் தடை செய்வீர்களானால், நீங்கள் உங்கள் எல்லைகளைப் பெரிதும் மீ}}கிறீர்கள், இந்தப் பிரச்சினையைப் பொது ஜனப் பத்திரிகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாள் வேண்டிக் கொள்கிறேன், -சுப்பிரமணிய பாரதி இந்தக் கடிதத்தி லிருந்து பாரதி தனது நூல்களைத் தடை செய் ததைக் கண்டித்து, சென்னை அரசாங்கத்துக்கும் எழுதியிருக்கிறான், பத்திரிகைகளிலும் இதற்கு முன்னரே எழுதியிருக்கிறான் என்று நமக்குத் தெரிய வருகிறது. என்றாலும், அவை பற்றிய விவரங்கள் எவையும் இன்னும் தேடிக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் இதன் பின் சில ஆண்டுகள் கழித்து பாரதி அப்போது லண்டனில் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் தலைவராகவிருந்தது. ராம்சே மாக்டொனால்டுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான். அதில் அவன் தன்னைப்பற்றியும், தனக்கு பிரிட்டிஷ் போலீஸார் இழைத்து வந்த கொடுமைகளையும் தொல்லை களையும் பற்றியும் விரிவாக எழுதியிருந்தான். அந்தக் கடிதம் 1914 பிப்ரவரி 10 அன்று 'ஹிந்து' பத்திரிகையில் 'இந்தியாவில் போலீஸ் ஆட்சி' (Police Rule in India) என்ற தலைப்பில் வெளிவந்தது. அந்தக் கடிதத்தில் ஏனைய பல விஷயங்களோடு பாரதி பின்வருமாறு எழுதியிருந்தான் : . During the trial of Ashe Murder Case at the Madras High Court, I could get some glimpses into the “evidences which made tj;e police suspect me as a possible abettar. J: would appear that some of the so called “Con3pirators- the charge of army conspiracy to murder Mr Ashe, be it noted, broke down in the course of the trial and Mass ab3ndorsed by the Government-had with them copies of a harmless jose poem and a social reform nove][ette written by me. It must also be mentioned that the particular men in whose possession