பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ரகசியச் சங்கங்களும் பிரமச்சரியமும் இந்தப் பின்னணியில் நாம் பாரதியின் இவ்விரு படை ப்புக்களையும் ஆராய முற்படும்போது, ஆயுதந்தாங்கிய விடுதலைப்போராட்டத்துக்குத் தயாரK A): தற்காக இந்தியாவில் அமைக்கப்பட்ட ரகசியச் சங்கங்கள்" பற்றிய ஓர் உண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும், அரவிந். தரின் தம்பி பரீந்திரருடன் சேர்ந்து, வங்காளத்தில் ஆயுதப் புரட்சிக் farm - ரகசியச் சங்: ங்களை அமைத்து வந்த மற்றோர் இளைஞர், சுவாமி விவேகானந்தரின் தம்பியான பூபேந்திர நாதர் ஆவார். இவரை ஆசிரியராகக் கொண்டு, வங்காளத்தில் புரட்சிவா திக ளுக்காக நடத் தப்பட்டு வந்த யுகாந்தர்' என்ற பத்திரிகை, 'புரட்சி' என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் ரகசியம் - சங்கங்களின் அவசியம் பற்றிப் பின்வருமாறு எழுதியது: “'துப்பாக்கிகளும் பனட் டுகளும் இருப்பதன் காரணமாக, சுதந்திரத்தைப் பற்றிப் பகிரங் தமாகப் பேசுவது அசாத்தியமாகும். எனவேதான் ரகசியச் சங்கங்கள் தேவைப்படுகின்றன. சுதந்திரத்தைப் பற்றி ஒருவர் பகிரங்கமாகப் பேச வேண்டுமென்றால், அவர் அதனைச் சுற்றி வளைத்துத்தான் பேசியாக வேண்டும். இந்தக் காரணத்துக்காகத்தான் மாய்மாலப் பேச்சு எதுவும் இல்லாமல், 'எது உண்மை ?' என்று மக்கள் !மனம் விட்டுப் பேசுவதற்கு ஓர் ரகசிய இடம் தேவைப்படுகிறது . ' அது . கொடுங்கோலன் பார்க்க முடியாத இடமாக இருக்க வேண்டும். ரஷ்யப் புரட்சிவாதிகள் தாம் இன் னது செய்ய வேண்டும் என்பதை, விவாதிப்பதற்காக, ரகசியமான இடங்களில் நள்ளிரவில் சந்திப்பது வழக்கம் . அவர் கள் இப்போதும் அவ்வாறே செய்து வருகின்றனர்.

  • பங்கிம் பாபுவும் தமது 'ஆனந்த மடத்தில் வருணித்துள்ளதும்

இத்தகைய விஷயம்தான்.. சன்னியாசிகள்' நள்ளிரவில் அடர்த்தியான காட்டில் விடுதலைக்காக ஆயுதங்களைச் சேகரித்து வந்தனர் (மேற் கோள் : Politicai Trouble-l, C. Kerr. P. 56-57). உண்மையில், வங்க இலக்கியத்தில் தேசியத் தீர்க்கதரிசி எனப் போற்றப்பட்ட வங்கிம் சத்திர சாட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம் -என்ற நாவலில், இடம் பெற்றிருந்த “வந்தே மாதரம்” என்ற பாடலே. வங்கப் பிரிவினை பற்றிய அறிவிப்புக்குப் பின், தேசியவா" திகளின் கீதமாகவும், 'வந்தே மாதரம்' என்பதே அவர்களது கோ539.மாகவும் மாறியது. பங்கிம் சந்திரர் 1773-ல் வங்காளத்தில் நவாபுகளில், ஆட்சியையும் கிழக்கிந்தியக் கம்பெனியின் சுரண்டலையும் எதிர்த்து :