பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலை நகர் 10-3-88 யேர சிரிபர், தமி ழாகரர், கலைமாமணி டாக்டர் ஆழ, அழகப்பன் எம்.ஏ., எம். கமிட்... பிஎச்.டி . தமிழ்த் துறைத் தலைவர், இந்திய மொழிப்புல முதன் ைம யம், அ ண்ண 5 மலைப் பல்கலைக் கழகம் அணிந்துரை பாரதியார் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையின்கீழ் 1987ஆம் ஆண்டு சன வரித் திங்கள் 23, 24 ஆகிய இரு நாளினில் நடைபெற்ற மூன்று பொழிவுகளே “பாஞ்சாலி சபதம்--உறைபொருளும் மறைபொருளும்' என்ற தலைப்பில் நூலாக வெளிவருகின்றது. இப்பொழிவுகளை நிகழ்த்தியவர் திருமிகு தொ. மு. சிதம்பரரகுநாதன் அவர்க ள் . {6ditor, Information Branch of the Consulate General 3£ U. S. S. R. in Madras), சொற்பொழிவாளர் நெல்லையிற் பிறந்தவர். விடுதலைப் போராட்டத்தில் சிறைப்பட்டதால் கல்லூரிப் படிப்பை இழந்தவர். தின மணி, சக்தி, சாந்தி இவற்றின் பத்திரிகை ஆசிரியர், சோவியத் செய்தித்துறையின் பத்திரிகைப் பிரிவின் முதலாசிரியர். தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் குறிப்பிடத்தக்கவர். சிறந்த கவிஞர், படைப்பாளி, நாடகத்திறனாய்வு வல்லுநர். பாரதியை முழுதும் இனங்கண்டுகொள்ள எழுதிவருபவர். நல்ல மொழிபெயர்ப்பாளர், புரட்சியாளர். 1. பாரதியும் ஷெல்லியும் 2. கங்கையும் காவிரியும் 3. பஈரதி காலமும் கருத்தும் 4. பாரதி - சில பார்வைகள் என்பவை சிதம்பரரகுநாதன் அவர்களின் பாரதி பற்றிய ஆய்வு நூல்கள். நாட்டுமக்கள் அனைவரும் போற்றிப்புகழும் ஒப்பற்ற தேசியக் கலியின் படைப்பிலக்கியங்களில் தமது பார்வையைப், பதிப்பித்த ரகுநாதன் அவர்கள், அவரின் படைப்புக்களை வைத்தே அவரை இனங்காட்ட முயற்சித்ததின் விளைவே இம்மூன்று பொழிவுகளும். இப்பொழிவுகளை அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்