பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7; பாரதியின் சகாவ்3 &TY

ான நீலகண்ட பிரம்மசாரி, சங்கர கிருஷ்ணன்

முதலிய பலரும் ஆஷ் கொலை வழக்குச் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு உட்பட்டிருந்த நிலை , அத்துடன் இந்தக் கொலையில் பாரதி உள்ளிட்ட பாண்டிச்சேரியிலிருந்த தேசபக்தர்களுக்குச் சம்பந்தமுண்டு என்று கருதி, அவர்களைப் டாண்டிசேரியிலிருந்து வெளியேற்றி, பின்னர் அவர்களைக் கைது செய்ய ஆங்கி:ே : அரசாங்கம் செய்து வந்த முயற்சிகள், பாரதிக்கு எதிராகவே ஆங்கில அரசாங்கம் பிடிவாரண்டைப் பிறப்பித்திருந்த நிலை, இதனால் ஏற்பட்ட. ஒற்றர் தொல்லைகள், மேலும் பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு' என்ற நூலையும், 'கனவு' என்ற நூலையும் ஆங்கிலேய அரசாங்கம் பறிமுதல் செய்து தடை செய்த காரியம், இத்தக்ைஷய நிலை: ஜ மகளால் தீவிரத் தேசியவாத இயக்கம் தமிழ் நாட்டிலும் நிலைகுலைந்து செலிழந்து போயிருந்த நிலைமை, அடுத்து என்ன செய்வது என்பதை எவராலும் தீர்மானிக்க இயலாதிருத்த சூழ்நிலை-ஆகிய பலவும் நிலவிய ஒரு காலத்தில்தான் பாரதி தனது 'பாஞ்சாலி சபத'த்தை இயற்றி முடித்திருக்கிறான் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். தீராத் தேசியவாத இயக்கம் நம்முரமாக நடைபெற்று வந்த காலத்தில் அந்த இயக்கத்துக்கு உதவும் தனிப் பாடல்களையே இயற்றிக் குவித்து வந்த பாரதிக்கு, பத்திரிகைகளுக்குக் கட்டுரை களும் செய்திக் கு, திப்புக்களும் எழுதித் தள்ளவேண்டி ய அவசியம் அற்றுப் போய் விட்ட பாரதிக்கு , சாவதானாக அமர்ந்து பெரும் கவிதைப் படைப்புக்களைப் படைப்பதற்குப் போதிய அவகாசம் இருந்த, காரணத்தினால் மட்டும்தான் அவன் தனது பெரும் கவிதைப் படைப் பான 'பாஞ்சாலி சபத' த்தை இயற்றி முடித்தான் என்பதில்லை. உண்மையில், தனது அரசியல் கருத்துக்களை நேரடியாகச் சொல்ல முடி&டாத, தெரிவிக்க முடியாத ஒரு சூழ்நிலையில், அவன் பாஞ்சாலியின் கதையைத் தனது கருத்தைத் தெரிவிப..தற்கு ஒரு கருவியாக்கிக் கொண்டான் என்று சொல்வதே பொருத்த மாகும். சொல்லப்போனால், தேசிய இயக்கமே சீர்குலைந்து செயலிழந்து நின்ற ஒரு தருணத்தில், அந்த இயக்கத்தில் சம்பந்தப்பட்டிருந்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்" . கும், தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் கருத்தோடுதான் !.சாரதி தனது , பாஞ்சாலி சபதத்தை எழுதி முடித் தான் ' என்று நாம் சொல்ல வேண்டும், பாஞ்சாலி சபதத்தில், பாஞ்சாலிக்கு மானபங்கம் இழைக்கப்பட்டதைக் கண்டு மனம்