பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பாஞ்சாலி சபதம் மின்னும் அமுதமும் போன்றவள்-இவர் மேவிடு தேவியை வைத்திட்டால், அவள் துன்னும் அதிட்ட முடையவள் இவர் தோற்ற தனைத்தையும் மீட்டலாம்.* என்றவுடன் கவிஞர் இதனைத் தாங்க முடியாமல் "அழிவுற்றது. உலகத்து அறமெலாம்' என்று சருக்கத்தை முடிக்கின்றார். இறுதியில் பாஞ்சாலியையும் இழக்க நேரிடு கின்றது. துரியோதனனும், தாச மடைந்த தடா!-நெடுநாட்பகை, நாமினி வாழ்ந்தோ மடா! பேசவும் தோன்று தில்லை;-உயிர் மாமனே! பேரின்பம் கூட்டிவிட்டாய்!" என்று மகிழ்ச்சிக் கடவில் மூழ்குகின்றான். இன்ங்னம் சகுனி பாரதப் போருக்கு வித்திடுகின்றான். எ. துச் சாதனன் சொல்லிடை நஞ்சு கக்கும் துன்மதி யுடைய தம்பி என்று வில்லி குறிப்பிடும் துச்சாதனனைப் பாரதியார் தீமையில் அண்ணனை வென்றவன்' என்று காட்டுவார். இவனைப்பற்றிய கவிஞரின் மதிப்பீடு இது: -கல்வி எள்ளளவேனுமி லாதவன்; கள்ளும் ஈரக் கறியும் விரும்பு வோன்;-பிற தெவ்வர் இவன்றனை அஞ்சுவார்;-தன்னைச் சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார்; 45. டிெ 3, 51: 241 46. டிெ 4. 53:250