பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 93 நாட்டு மன்னனாக்கினான். இவனும் .ெ க ைட யி ல் சிறந்து விளங்கினான். கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை என்றபழமொழி பிறப்பதற்கும் காரணமாகின்றான். இவனைப்பற்றி இக்காவியத்தில் அதிகமான குறிப்புகள் இல்லை. துரியோதனன் அவையில் இவன் முக்கிய உறுப்பி னன். இதனைக் கவிஞர், மெந்நெறி வான்கொடை யான்-உயர் மானமும் வீரமும் மதியு முளோன் உய்ந்நெறி யறியாதான் இறைக்கு உயிர்நிகர் கன்னனும் உடனிருந்தான்.'" என்று குறிப்பிடுவார். துரியோதனுக்கு உயிர் நிகர் நண்பன் என்றும், மெந்நெறி வான்கொடையான் என்றும் குறிப் பிடுவதைக் காண்க. மிக்க அறிவுடையவன்; மானத்தையும் வீரத்தையும் போற்றுபவன் என்பதனைக் காட்டுவதையும் காண்க, காவியத்தில் இவன் துரியோதனனுக்குப் பதிலாக ஆணை பிறப்பிப்பதனால் இவனுடைய நட்பின் நெருக்கம் தெளி வாகப் புலனாகும். துச்சாதனனால் அவைக்கு இழுத்து வரப் பெற்ற திரெளபதியின் நிலை கண்டு கெளரவர்களில் கடைக் குட்டியான விகர்ணன் நீதியுரைக்கும்போது கர்ணன் அவனை வாயடக்குகின்றான் "தாரணி வேந்தர் யாவரும் நடைபெறு வது சரி என்றெண்ணி வாய் புதைத்திருக்க, நீ.பெரிய மனிதன் போல் நியாயம் பேசவந்து விட்டாய். நினக்கு விரகும் இல்லை; அறிவும் இல்லை. பசுமையால் பிதற்றுகின்றாய்; சிந்திக்கத் திறனும் இல்லாதவன் நீ என்று அவனைத்தட்டிக் கேட்கும் அளவுக்கு உரிமை பெற்றிருந்தான். உடனே பாண்டவர்கள் பக்கம் திரும்பிப் பேசுவான்: 49. டிெ 1.4:18