பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாஞ்சாலி சபதம் கக. சகாதேவன் : பாண்டவர்களின் கடைக்குட்டி இவன்; மாத்ரியின் இரண்டாவது மகன். இவனைப் பாரதியார், எப்பொழு தும்பிர மத்திலே-சிந்தை ஏற்றி உலகமொ ராடல்போல் - எண்ணித் தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் - வகை தானுணர்ந் தான்" என்று காட்டுவார். இதனால் இவன் சிறந்த யோகி என்பது தெளிவு. தம்பியரில் இவன்தான் தருமகனுக்கு முதன் முதலாகச் சூதுப் போரில் பணயப் பொருளாகின்றான். அவையில் ஆடை குலைவுற்று நிற்கும் பாஞ்சாலியை மாடு நிகர்த்த துச்சாதனன் மைகுழலைப் பற்றி இழுக்கும் நிலை யைக் கண்டு வெஞ்சினம் மீறி எழுந்த பீமன், இவளை அண்ணன் பணயப் பொருளாக வைத்ததைப் பொறுக்க மாட்டாது, இது பொறுப்பதில்லை-தம்பீ! எரிதழல் கொண்டுவா கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எதித்திடுவோம்" என்று சகாதேவனை நோக்கிக் கூறியதாகப் பாரதி காட்டுவார். கடைக் குட்டியாதலால் குற்றேவல் புரிவதற்கு உரிமையாக ஏவப்படுகின்றான் போலும். இவனது யோகத்தின் மகிமையை வில்லியில் தெளிவாகக் காணலாம். கிருட்டிணன் துTது செல்வதற்கு முன் ஒருநாள் சகாதேவனை தனியிடத்திற்கு அழைத்துச் சென்று பாரதப் போர் நிகழாதிருக்க உபாயம் என்?’ என்று வினவ, அதற் 54. டிெ, 3.45:229 35. டிெ. 5.66:281