பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாஞ்சாலி சபதம் வண்ணப்பொற் சேலைக ளாம். அவை வளர்ந்தன, வளர்ந்தன வளர்ந்தனவே! எண்ணத்தி லடங்கா வே;-அவை எத்தனை எத்தனை நிறத்தன வோ என்று அற்புதமாகக் காட்டப்பெறுகின்றது. கொடியன் துச்சாதனனும் கைசோர்ந்து வீழ்ந்து விடுகின்றான், இராமா யணத்திலுள்ள நிகழ்ச்சிகள் போலன்றி இங்குள்ளவை தெய்விக ஆற்றலால்தான் நடைபெறுகின்றன. கண்ணன் பரம்பொருளின் கூறு என்று எல்லோரும் உணரும்படி மக்களுடன் கலந்து பழகுகின்றான். ',ஆதில் பரம்பொருள் நாரணன்;-தெளி வாகிய பாற்கடல் மீதிலே-நல்ல சோதிப் பணாமுடி யாயிரம்-கொண்ட தொல்லறி வென்னுமோர் பாம்பின் மேல்-ஒரு போதத் துயில்கொளும் நாயகன்,-கலை போந்து புவியிசைத் தோன்றினான்-இந்தச் சீதக் குவளை விழியினான்’’’ என்ற திருதராட்டிரன் வாய்மொழியால் அவன் கண்ணனை நன்கு அறிந்தவன் என்பது தெளிவு. இங்ஙனமே விதுரன் வீட்டுமன், துரோணர் போன்ற பெரியோர்கள் கண்ணனை நன்கு அறிந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பாண்டவர்களும் கண்ணனைத் தெய்வக் கூறாகவே கொண்டிருந்தனர். வீமன் சபதம் உரைக்கும் போது. 1. பா. ச. 5. 70:300 2. டிெ 1:9:81