பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#so பாஞ்சாலி சபதம் தொல் காப்பியத்தில் கூறப்பெற்றிருக்கும் விருந்து: என்ற தலைப்பில் இவற்றினை அடக்கி இலக்கணமும் கூற முடியும். விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்பது தொல்காப்பியம். இதற்கு உரை கண்ட பேராசிரி யரும், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது என்று கூறியிருப்பதும் இதனை வலியுறுத்தும். தவிர கடந்த பல நூற்றாண்டுகளாகச் சில சில்லறைப் பிரபந்தங்களைத் தவிர, முக்கியமான நூல்கள் யாவற்றையும் விருத்தப் பாக்களில் செய்து கவிஞர்கள் அப் பாக்களின் பரப்புக்கும் ஆற்றலுக்கும் ஓர் எல்லை கண்டு விட்டனர் என்று சொல்லாம். இதை நன்கு அறிந்த பாரதியார் தமது காப்பியத்திற்குப் புது யாப்புக் கருவிகளைக் தேடிக் கொண்டார். விருத்த யாப்பைக் கையாண்டால் அளவைக் கருதி அனாவசியமான சொற்களையும் பாவங்களையும் கையாள நேரிடும் என்றுதான் அதனைக் கையாள வில்லை. என்றாலும், அதனை அடியோடு நீக்கி விடவும் இல்லை. ஒரிரண்டு இடங்களில் புதிய முறையில் எண்சீர் விருத்தங் களைக் கையாண்டுதான் உள்ளார். புதிய கற்பனைகளும் தற் காலத்திற்கேற்ற கருத்துகளும் அழகுறப் பொதிய வேண்டு LFళrథ புதுப்புது யாப்பு முறைகள் கட்டாயம் வேண்டும். புலவர்கள் தமது மனநிலைக்கும் சொல்லாற்றலுக்கும் தகுந்த வாறு நடையை அமைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய கவனமெல்லாம் காவியப் படைப்பு வெற்றிகரமாய் முடிந்துள் ளதா என்பதில்தான் செல்ல வேண்டும்: தமிழ்க் காவியங் களின் நடை கடினமாயும் விறைப்பாயும் கரடு முரடாயும் சாதாரண மக்களுக்குப் புரியக் கூடாத முறையிலுந்தான் 2. தொல். பொருள்-செய் 238