பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-10 காவியத்தில் உருக்காட்சிகள் இயற்கையையும் வாழ்க்கையின் உண்மைகளையும் கூர்ந்து நோக்கும் கவிஞன் ஒர் இலக்கியத்தைப் படைக்கும் போது அவற்றை அவ்விலக்கியங்களில் அமைக்கின்றான்; அவை கலைகளாகின்றன. இவ்விலக்கியத்தை படிக்கும் நாம் அவற்றில் ஆழங்கால் பட்டு நம்மையும் மறக்கின்றோம் இதுவே முருகியல் நிலை. இதுவே உலகத்திற்கு மூலமாய் நிற்கும் இன்பப் பெருக்கில் ஒன்று பட்டு வாழ்வதாகும். இதுவே நம்மை உயர்த்தும், நம்மையும் அறியாமல் நமது உள்ளம் தேடித் திரியும் நிலையும் இதுவே யாகும். பாரதி யாரின் பாஞ்சாவி சபதத்தைப் படிப்போர் இத்தகைய ஒர் அநுபவ நிலையை உணரலாம். இயற்கையையும் பிற வற்றையும் அவர் அநுபவித்ததைப்போலவே அவர்தம் காவியத்தைப் படிக்கும் நாமும் நம்புலன்களின் துணை கொண்டு அவற்றை அநுபவித்து மகிழலாம். எந்தந் கவிஞனும் தன் அநுபவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் உணர்வூட்டி நமக்குத் தருகின்றான். உருக் காட்சிகள் (images), சிந்தனை இவற்றின் குறியீடுகளாகச் (Symbols) சொற்கள் பணிபுரிகின்றன என்பதை நாம் அறி வோம். பர்ட்ட ள் என்ற திறனாய்வாளரின் கருத்துப்படி கவிதையின் உருக்காட்சி சொற்களின்மூலம் நம்புலன்