பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் உருக்காட்சிகள் i29 தேவியை நிலத்திருவை எங்குந் தேடினுங் கிடைப்படுந் திரவியத்தை படிமிசை இசையுறவே-நடை பயின்றிடுந் தெய்விக மலர்க் கொடியைக் கடிகழ் மின்னுருவை,-ஒரு கமனியக் கனவினை காதலினை வடிவுறு பேரழகை....." இப்படிப் போகின்றது. திரெளபதி பற்றிய சொல்லோவியம். இதில் கட்புல, செவிப்புல, இயக்கப்புல உருக்காட்சிகள் அமைந்து திரெளபதியை நம் மனம் காணச் செய்கின்றன. இங்ங்னம் பல கலவை நிலை உருக் காட்சிகளைக் காவியத் தில் கண்டு மகிழலாம். மின் வெட்டுப் போன்ற மணிமொழி உருக்காட்சிகள்: இவண் காட்டிய பல்வேறு வகை உருக்காட்சிகளைத் தவிர பல்வேறு இடங்களில் கவிஞரின் சொற்களிலும் சொற் றொடர்களிலும் மின்வெட்டுகள் போன்ற பல்வேறு உருக் காட்சிகள் பாங்குற அமைத்திருப்பதையும் கண்டு மகிழலாம். அவ்ற்றுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக்காட்டுவோம். ஆமெனும் பொருளனைத்தாய் (பிரும்மம்), போதமெனும் நாசியினாள், சீரியல் மதி முகத்தார், கண்ணைப் பறிக்கும் அழகுடையார், வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ, ஒதக்குவளை விழியினாள், கஞ்ச மலரிற் கடவுள் வியப்ப, மதுர மொழியில் குசலங்கள் பேசி, மகன் புலைமயும் தந்தை யின் புலைமைகளும் யாரிடம் அவிழ்க்கின்றார், குன்றினிலே ஏற்றி வைத்த விளக்கைப் போல, திருவுளத்தின் ஆக்கினை, சேலைப் போல் விழியாள், மின் வட்டின் வயிரக் கால்கள் 10. ബ്ലേ..4:52:243-244 9س urr