பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மை $35 பேச்சை வளர்த்துப் பயனொன்று மில்லை,என் காமனே! -அவர் பேற்றை அழிக்க உபாயஞ் சொல்லுவாய் என்றன் மாமனே! தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்றுசெய்து, நாம்-அவர் செல்வங் கவர்ந்தவரை விட வேண்டும் தெருவிலே." என்று தன் மனக்கருத்தை வெளியிடுகின்றான். பாண்டவர் வேள்வியிற் சமைத்தது போன்று, அளவற்ற பொருட் செலவில் வையக மீதில் இணையற்றதாக மண்டபம் சமைக்கச் செய்ததும், அதனைப் பார்த்து மகிழப் பாண்டவர் களை மறுவிருந்தாட விதுரனைப் போக்கியதும், விருந் திற்குப் பின்னர் சகுனியைத் தருமனுடன் கவறாடச் செய்ததும், அதில் பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து அடிமைகளானதும், துரியோதனன் தம்பி துச்சாதனனைக் கொண்டு பாஞ்சாலியை மன்றுக்கு இழுத்து வந்து உலகம் கேட்டிராத முறையில் அவமானம் அடையச் செய்ததுமான செயல்கள் தொடர் சங்கிலிபோல் நிகழ்வதைக் காட்டிப் பாரதப் போரை நினைக்கவும் அதில் துரியோதனன் தன் தம்பியருடன் மாண்டு போவதையும் நினைக்கச் செய் கின்றார். இவை அழுக்காறுஉடையார்க்கு அதுவே சாலும்" என்றும், அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி புய்த்து விடும்"