பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4% பாஞ்சாலி சபதம் அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கெளி தென்று" விதியின்மீது பாரம் போட்டு மெய்சோர்ந்து விழுகின்றான். (2) தருமன் அத்தினபுரம் செல்ல ஒருப்படுகின்றான். ஆயின், காமனும் சாமனும் ஒத்த வீமனும் வில்விசயனும் தமையன் பேச்சைத் தட்டிப் பணிவொடு பேசுகின்றனர்; அவர்கள் அழைப்பை ஏற்க ஒருப்படவில்லை. அப்போது பல நியாயங்களை எடுத்துரைக்கும் தருமன் எல்லாம் விதியின்படி நடக்கும் என்றும், கடமையை ஆற்றுவது தம் கடன் என்றும் கூறுகின்றான். * இங்கிவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்குஞ் செயல்களாம்:-முடி வெங்கணு மின்றி எவற்றினும் - என்றும் ஏறி இடையின்றிச் செல்வதாம் - ஒரு சங்கிலி யொக்கும் விதிகண்டீர் - வெறுஞ் சாத்திர மன்றிது சத்தியம்' என்ற தருமன் வாக்கில் விதியின் செயல் விளக்கப் பெறுவ தைக் காணலாம். (3) பாண்டவர் அத்தினபுரத்திற்குப் பயணப்படு கின்றனர். இப்போது கவிப்பரிவு (Poetic sympathy) செயற் படுகின்றது. இது கவிஞரின் தற் கூற்றாக, விதியைப் பற்றிய விளக்கமாக, வெளிப்படுகின்றது. இந்தப் பயணத்தை நெடுங்கரத்து விதி காட்டும் நெறி' என்றே குறிப்பிடு கின்றார் கவிஞர். மேலும், விதியின் திருவிளையாடல்களை, 18. ബ്ലൂ. 1. 15: 113 19. டிெ.1, 15: 114 20. ழெ, 1, 24:139