பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மை ł45 பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்! பெண்பாவ மன்றோ பெரியவசை கொள்ளீரோ? கண்பார்க்க வேண்டும், என்றெல்லாம் ஓலமிட்டு 'வம்புமலர்க் கூந்தல் மண்மேல் புரண்டுவிழ, அம்பு பட்டமான்போல் அழுது துடிதுடிக் குன்றாள். தீயவர் அவையில் ஒருவரும் அவளுக்குத் துணை செய்தாரிலர். நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்' இங்ஙனம் பெண்ணினத்திற்கு வேண்டிய ஆண்மைக் கறு களையெல்லாம் கொண்டவளாதலால், திரெளபதி நிலைமை களைச் சமாளித்துக் கொள்ளுகின்றாள். கண்ணனின் துணை இவளுக்கிருந்ததால் இவளால் தப்பித்துக் கொள்ள (ԼԲ1գகின்றது. இந்தப் பெண் பாவம்தான் பாரதப் போருக்கு வித்திட்டது; கெளரவர்களும் பூண்டோடு அழிந்துபட்டனர். இங்ங்ணம் காவியம் உணர்த்தும் உண்மைகள் பல வாகும். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை கவிதையின் சிறப்புக்கு ஓசை, சொல்லடுக்கு முதலியவை இன்றியமை யாதவையாக இருப்பினும் கவிதையின் பொருளமைப்பே முக்கியமாகக் கொள்ளப்பெறுகின்றது. தமிழர்கள் இன்பம் என்ற சொல்லுக்குக் கண்ட பொருள் சற்று ஆழமுடையது. நிலைபேறுடைய இன்பத்தைத் தருவது எதுவாயினும் அஃது உண்மையும் ஆழமும் உடையதாயிருத்தல் வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. மேனாட்டுத் திறனாய்வாளர்களிலும் 24. புதுமைப் பெண் - 7. {) و سrraقسt