பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 2 தமிழில் காவியங்கள் ஒரு மொழியின் வளத்தை அம் மொழியிலுள்ள காப்பி பங்களே புலப்படுத்தும். பண்டைக் காலந்தொட்டு வளம் மலிந்த நம் தமிழ் மொழியில் அளவிறந்த காவியங்கள் உண்டாயின. காவியங்களை (காப்பியங்களை) இலக்கண நூல்கள் பொருள் தொடர்நிலைச் செய்யுட்கள் என்று குறிப்பிடும். தமிழர்களின் தலைசிறந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் தோல். ‘விருந்து போன்ற பெயர் களால் குறிப்பிடப்பெறும் காப்பியங்கள் இன்று வழக்காறு ஆற்றுப் போயின. அவை உரையாசிரியர்கள் காலத்தே வழங்கு வீழ்ந்தைமையின் அவர்கள் அவற்றைக் கூறாமல் இலக்கணத்தை விளக்குவதற்குத் தத்தம் காலத்தில் வழங்கிய நூல்களை மேற்கோள்களாகக் காட்டிச் சென்றனர். இன்று நம்மிடையே பயின்று வரும் சிலப்பதிகாரம், மணி மேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் கலிங்கத்துப் பரணி, பல்வேறு தலபுராணங்கள் போன்ற காப் துளையும், பிற சமய அறிஞர்கள் அண்மைக் காலத்தில் இயற்றிய தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம், சீறாப் புராணம் போன்றவைகளையும் வரலாற்று வரிசையில் வைத்து நோக்கினால் அவற்றினிடையே உள்ள பொதுத் தன்மை புலனாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டுவரையில் தோன்றிய காப்பியங்களில் பெரும்பாலும் அகவல் நடை