பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-3 கதைக் கரு பாரதத்தில் குதுப்போர் சருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது இக்காப்பியம் என்பதை இயல் - 1 இல் குறிப்பிட்டோம். காப்பியப்பொருளைத் தேர்ந்தெடுத்த பின்னர் அதில் வரும் நிகழ்ச்சிகளை மனம் கவரும் வண்ணம் தன் கற்பனையினால் புணர்ப்பதில்தான் கவிஞனின் திறம் வெளிப்படுகின்றது. நிகழ்ச்சிகளின் புணர்ப்பும் காவியத்தைச் சிறப்புறச் செய்கின்றது; உயிர்ப்பு ஒருமைப்பாட்டையும் உண்டாக்கி விடுகின்றது, நிகழ்ச்சிகளின் புணர்ப்பைக் கதைக் கரு (Piet) என்றும் வழங்குவர். பழைய கதையைப் புதிய காவியமாகப் புனைவது எளிதன்று: அ..து உயிர் ஒளியுடன் ஒளிரும் கவிதை புனையும் ஆற்றலைப் பெற்ற மேதையர்களா லேயே செய்ய முடியும். இந்தமுறையில் நோக்கினால் பாஞ் சாலிசபதம் பாரதியாரின் கவித்திறத்தின் தனி வெற்றியாகத் திகழ்வதைக் காணலாம். பாண்டவர்கள் இராசசூயப் பெரு வேள்வி செய்து பெற்ற பெரும் புகழ் துரியோதனனின் மனத் தில் பொறாமைத் தீயை மூட்டுகின்றது. இந்தப்பொறாமைத் தீயே பாரதப் போருக்கும் வித்திடுகின்றது. துரியோதனன் பெறாமையால் படும் மனவேதனையையும் உள்ளக் குமுறலை யும் கவிஞர் இதிகாசத்திற்கேற்ற விரிவுடன் அழகு பெறச் சித்திரித்திருப்பது சிந்தித்துச் சிந்தித்து மகிழ்வதற்குரியது.