பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் கரு 21 காண்தகு வில்லுடை யோன் - அந்தக் காளை அருச்சுனன் கண்க ளிலும் மாண்தகு திறல் வீமன் - தட மார்பிலும் எனதிகழ் வரைந்துள்தே." என்று துரியோதனனின் மனநிலையைப் புதிய அழகுடன் அவனே கூறுவதாக அமைந்துள்ள வரிகளுக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம்’ என்று பழைய மரபு முறையில் சொன்னாலும் மனநிறைவு ஏற்படவில்லை. இவற்றில் துரியோதனனின் பொறாமைத் தி கொழுந்து விட்டுப் பொறிகளுடன் கிளம்பு வதை மானசீகமாகக் காணமுடிகின்றது. இந்தக் கட்டத்தில் துரியோதனனின் மனநிலையைக் கவிஞர் மக்கள் மனோ தத்துவ உண்மைகள் பொலிந்து திகழுமாறு புனைந்து காட்டுவது நம்மை இலக்கியச் சுவைகளின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்துகின்றது. பொறாமைத் தீபடுத்தும் பாட்டை, வன்றி றிறத்தொரு கல்லெனும் நெஞ்சன், வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான், குன்றமொன்று குழைவுற்று இளகிக் குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம் கன்று பூதலத் துள்ளுறை வெம்மை காய்ந்தெ ழுந்து வெளிப்படல் போல நெஞ்சத் துள்ளோர் பொறாமை எனுந்தீ நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய் மஞ்சன் ஆண்மை மறத்திண்மை மானம் y வன்மை யாவும் மறந்தன னாகிப் பஞ்சை யாமொரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப் பானாய்" 1・ Lim.字。1:5.20 2. ഒി 1:5:38,39