பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு இந்தக் காட்சியைச் சித்திரிக்கும் கவிஞருக்கே துக்கம் தாங்கவில்லை. சினம், அருவருப்பு கருணம் இவையெல் லாம் கலந்த உணர்ச்சியுடன் கவிக் கூற்றாகத் தம் உள்ளக் குமுறலைக் கொட்டு கின்றார். வேள்விப் பொருளினை யே-புலைநாயின்முன் மென்றிட வைப்பவர் போல, நீள்விட்டப் பொன்மாளி கை-கட்டிப்பேயினை தேர்ந்து குடி யேற்றல் போல், ஆள்விற்றுப் பொன்வாங்கியே-செய்தபூணையோர் ஆந்தைக்குப் பூட்டுதல் போல், கேள்விக் கொருவரில் லை-உயிர்த்தேவியைக் கீழ்மக்கட் காளாக்கி னான்." மேலும் அவரது சோகக் குரல், செருப்புக்குத் தோல் வேண்டி யே-இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை? விருப்புற்ற சூதினுக்கே - ஒத்த பந்தயம் மெய்த்தவப் பாஞ்சாலி யோ?" என்ற பகுதியில் ஒலிக்கின்றதைக் கேட்கின்றோம். சென்னை மாநகரில் காய்கறிச் சந்தையில் விற்போரிட மும் வீட்டுக்கு வீடு வந்து பழைய தாள்களை வாங்குவோரிட மும் அவர்கள் வைத்துள்ள தராசும் அவர்கள் எண்ணப்படி வணங்கிக் கொடுப்பதுபோல் சகுனியின் தாயக் காய்களும் அவன் ஏவல்படி செயற்படுகின்றன. 5. டிெ 4.52:245 ്. ♔. 4.52:24;