பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு நின்து துரியோதனன்-அந்தமாமனை நெஞ்சொடு சேரக் கட்டி, ‘என்துயர் தீர்த்தா யடா!-உயிர் மாமனே! ஏளனந் தீர்த்து விட்டாய் அன்று நகைத்தா ளடா!-உயிர் மாமனே! அவளைஎன் ஆளாக்கி னாய் என்றும் மறவே னடா?-உயிர்மாமனே! என்ன கைம்மாறு செய்வேன்!?” என்று சொல்விக் களிக்கின்றான்; கூத்தாடுகின்றான். இக் காட்சியையும், என்றுபல சொல்லுவான்-துரியோதனன் எண்ணி எண்ணிக் குதிப்பான்: குன்று குதிப்பது போல்-துரியோதனன் கொட்டிக் குதித் தாடுவான்' என்று காட்டுவார் கவிஞர். கரியோ ராயிரத்தின் வலி காட்டிடுவோன் அல்லவா? யானையைப் போலில்லா விட்டா லும் பெரிய உடலையாவது கொண்டிருத்தல் வேண்டும். இதனைத் தெளிவுறுத்தவே குன்று குதிப்பது போல்’ என்ற உவமையைக் கையாண்டுள்ளார். துரியோதனனின் மன்று குழப்பமுற்றுக் கெளரவர் கூட்டம் வகைதொகை யொன்று மின்றி களித்துக் கூத்தாடினதைத் தம்மால் எடுத்துக் கூற முடியாதென்பதை, அன்று புரிந்ததெல்லாம்-என்றன் பாட்டினிலே ஆக்கல் எளிதாகு மோர்? என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். 9. டிெ. 45.4:249 10. டிெ 4.54:250