பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாஞ்சாலி சபதம் இவளோ கொங்கச் செல்வி: குடமலை ஆட்டி தென்தமிழ்ப் பாவை; செய்ததவக் கொழுந்து, ஒருமா மணியாய், உலகிற்கு ஓங்கிய திருமாமணி" என்று இவளைக் காட்டுவர். கவுந்தி அடிகள் இவளை மாதரி யிடம் அடைக்கலமாகத் தந்த போது, என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்; கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடி, தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க்கு இன்றி யமையைாக் கற்புக்கடம் பூண்டஇத் தெய்வம் அல்லது, பொற்புடைத் தெய்வம் யாம்கண் டி லமால்' என்று புகழ்ந்து உரைப்பர். அமைதியாக இருந்த கண்ணகி தன் கணவன் கொலைக்களப்பட்ட செய்தியைக் கேட்டதும் 4. டிெ, 2. 12: 47.50 5. டிெ 2.15; 137-144