பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாஞ்சாலி சபதம் நிலையில் காண்கின்றோம். இவன்தானே இவளைத் தனது வில்லாண்மையினால் வென்று பெற்றான்? எனவே, இவன் மீது இவளுக்கு ஒரு வகையான தனிப்பற்று இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கின்றோம். கானுறை வாழ்க்கையில் கூட இவளுக்கு நேரிடும் இடர்களை யெல்லாம் அருச்சுனன னும் வீமனும்தான் களைவதைக் காண்கின்றோம். வாதம் புரிவதிலும், நீதிகளை எடுத்துக்காட்டுவதிலும் அவையில் துணிவாகப் பேசுவதிலும் இவளை யொத்த பாத்திரம் கண்ணகியைத் தவிர, தமிழ்க் காவியங்களில் வேறொருவரைக் காண்டல் அரிது. துரியோதனன் ஆணை யினால் முதலில் இவளை அழைத்துச் செல்ல வந்த தேர்ப் பாகன் சபையில் நிகழ்ந்ததைச் சொல்லி அழைக்கும்போது இவள் கூறுவாள்: ग्रेर श्र फल * ы. «k ...'யார் சொன்ன வார்த்தையடா! சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து மாதர் வருதல் மரபோடா? யார்பணியால் என்னை அழைக்கின்றாய்?" என்று கேட்க, தேர்ப்பாகன் மன்னன் சுயோதனன் வார்த் தையினால் என்று மறுமொழி தருகின்றான். உடனே அவள், 'நல்லது; நீசென்று நடந்தைகதை கேட்டுவா வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம் என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா? சென்று சபையில் இச் செய்தி தெரிந்துவா? என்று கூறி அவனைத் திருப்பியனுப்புவதில் இவளது துணி வினையும் பிரச்சினையை அணுகும் நுட்ப மதியினையும் காண முடிகிறது. இரண்டாம் முறை திரெளபதியிடம் சென்று துரியோதனன் சினந்து கூறியதைச் செப்பி அழைக் கும்போது அவள் கூறிய மறுமொழி: