பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் - திரெளபதி 49 தலைவியின் நிலை கண்டு பச்சாதாபப்படுகின்றோம். நெஞ்சத் துணிவு கொண்ட ஒரு புதுமைப் பெண்ணைக் கண்டு வியக் கின்றோம். திரெளபதியை மனத்தில் கொண்டுதான் பாரதி 'புதுமைப் பெண்” என்ற கவிதையைத் தொடுத்தனரோ என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. கண்ணனை அவன் வாழ்ந்த காலத்தில் தெய்வம் என்று நினைத்தவர்களுள் திரெளபதியும் ஒருத்தி. தன்னால் துச்சாதனின் கயமைச் செயலினின்றும் விடுவித்துக் கொள்ள முடியாது என்றும், அவையோர் கையாலாகாத கபோதிகள் என்றும் தெளிந்தும் இவள் கண்ணனைச் சரண் அடை கின்றாள். உட்சோ தியிற் கலந்தாள்-அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமை புற்றாள்." என்று சரணாகதி தத்துவம் இரத்தினச்சுருக்கமாகக் காட்டப் படுகின்றது. பலனும் கையிலங்கு நெல்லிக்கனியாகக் கிடைத்து விடுகின்றது. கண்ண பிராணருளால்-தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய் வண்ணப்பொற் சேலைகளாம்.-அவை: வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே." கற்புக்கரசி மானங்காக்கப் பெறுகின்றாள். வீமனும் அருச்சுனனும் செய்த சபதங்களைத் தொடர்ந்து இப்பத்தினித் தெய்வம் செய்த சபதத்தை கவிஞர் அற்புத மாகக் காட்டுவார்: 9, ♔.5.70:292 10. ඞා...5.70:300 பா4ை