பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 65 ஆதிப்பசம் பொருள்தான் கண்ணன் வடிவில் தோன்றி யுள்ளது என்பது அவன் கண்ட உண்மை; நம்பிக்கை. அவன் கூறுவான்: 'ஆதிப் பரம் பொருள் நாரணன்;-தெளி வாகிய பாற்கடல் மீதிலே-நல்ல சோதிப் பனாமுடி யாயிரம்- கொண்ட தொல்லறி வென்னுமேர் பாம்பின்மேல்-ஒரு போதத் துயில்கொளும் நாயகன்.--கலை போந்து புவிமிசைத் தோன்றினான்-இந்தச் சீதக் குவளை விழியினான்-என்று செப்புவர் உண்மை தெளிந்தவர்." அப்பரம் பொருள் துணை இருக்கும்வரைப் பாண்டவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்பது அவனுக்குத் தெரியும். கண்ணனைப்பற்றிச் சகுனியிடம் தான் கூறுவது ஒரு பேய்க்கு வேதம் உணர்த்துவது போலாகும் என்று பேசுகின்றான். தன் அறிவுரைகள் யாவும் தன்மைந்தன் காதில் ஏற வில்லை. கல்லாத புல்லர்க்கு நல்லோர் உரைத்த பொருள் போல் ஒரு காதினுள் நுழைந்து மற்றொரு காது வழியாக வெளியேறிவிடுகின்றது; மைந்தன் மனவுறுதியை அவற்றால் அசைக்க முடியவில்லை. ஆகவே, மைந்தன் கருத்துக்கு ஒருப்படுகின்றான். 'விதி! விதி! விதி! மகனே-இனி வேறெது சொல்லுவன் அட மகனே! கதியுறுங் கால னன்றோ-இந்தக் கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்? கொதியுறு முளம் வேண்டா, நின்றன் கொள்கையின் படிஅவர் தமைஅழைப்பேன்; வதியுறு மனைசெல் வாய்” 6. டிெ 1.1:81 7. டிெ 1.14:108 i.fir=5