பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாஞ்சான் சபதம் 1. விதுசன். இவன் திருதராட்டிரன் அமைச்சரவையில் இருத்த நல்லவர்களுள் ஒருவன். கண்ணிலானின் கடைசித் தம்பி. இவனை வில்லி வென்றிறல் விதுரன் என்று கூறுவர். பாதியார் இவனை மெய்ந்நெறி யுணர் விதுரன் என்று காட்டுவர். திருதராட்டிரன் ஆட்சியில் அக்கண்ணி வானுக்கு இவன் ஒரு கண்போல் துணைபுரிபவன். பாண்டவர் களைப் பாஞ்சாலியுடன் மறு விருந்திற்கழைத்து வர இவனைத்தான் திருதராட்டிரன் இந்திரப் பிரத்தத்திற்குத் தாதாக அனுப்பி வைக்கின்றான். துரியோதனனின் திச் செயலைப்பற்றிக் கண்ணிலான் குறிப்பிடுங்கால், போச்சுது! போச்சுது! பாரத நாடு: போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம் ஐய இதனைத் தடுத்தல் அரிதோ?” என்று பெருந்துயர் கொள்வதைக் காண்கின்றோம். இக் கூற்றில் மெய்ந் நெறியுணர் விதுரன் நமக்குக் காட்சி தரு கின்றான். பாண்டவர்கள்பால் இவன் பேரன்பு கொண்டவன்; அவர்களும் இவன்பால் பெருமதிப்பு கொண்டிருந்தனர். விதுரன் தம் நகர் வரும் செய்தியறிந்து அவனைச் சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் கொண்டு எதிர் கொண் உழைத்தலாலும், மணிமுடி தாழ்த்திபதமலர்போற்றி வணங் குதலாலும், மதுரமொழியில் குசலங்கள் பேசுவதாலும்’ இவன்மீது அவர்கள் கொண்டிருந்த பெருமையை அறிய முடிகின்றது. விதுரனும் ஐவரையும் தனியாக அழைத்துச் சென்று துரியோதனன் மண்பம் கட்டியதையும், அதில் பாண் டவர்களைச் சூதுக் கழைக்கும் திட்டத்தையும் அறிவித்து سببیحاع ۳۰۰۰ 22. டிெ 1, 15 113