பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 77 கின்றான். விதியின் செயல்களை நன்கு அறிந்தவன் ஆயினும், நின்னிடம் நான் ஒரு பேதை போலாகி விட்டேன். நின் சதி வழியைத் தடுத்து அறவுரைகள் சொன்னேன். அவை யாவும் நினக்கு வினுரைகளாகி விட்டன. இனிப் பேசிப் பயனொன் றில்லை. நின் மதி வழியே சென்று பயன் பெறுக’ என்று கூறி வாய் மூடி, தலைகுனிந்து, அமர்ந்து விடுகின்றான். கண்மூடி மெளனியாகி ஒரு தலையாட்டி பொம்மைபோல் அரசவை யில் ஒர் அமைச்சனாக இருக்க விரும்பாதவன் இப் பெரு மகன். பின்னர் திரெளபதியை அவைக்குக் கொணருமாறு துரியோதனன் தன்னை ஏவும்போது அவன் உரைக்கும் அறவுரை கன்னெஞ்சத்தையும் உருகச் செய்யும். ஆனால் இவ்வுரையைக் கேட்ட முடன் துரியோனன் இவனுக்குத் தந்த பரிசு இது: இச்சி! மடையா, கெடுகநீ எப்போதும் எம்மைச் சபித்தல் இயல் புனக்கே இப்போதுன் சொல்லை எவரும் செவிக் கொள்ளார்?’’ என்பதுதான். இவன் நோக்கமெல்லாம் மாபாரதப் போர் இல்லாமல் மன்பதை உய்ய வேண்டும் என்பதுதான். இச் ஒறிய காவியத்தில் விதுரன் படைப்பு நம் கவனத்தை நன்கு ஈர்க்கக் கூடியதாகும். து சமன்: ஒளி மறைவு இல்லாமல் திரெளபதிக்கு உதவு பவன். எளியவர், வலுவற்றர் இவர்கள் பொருட்டும் உதவு பவன். தருமனுக்கு அடுத்த தம்பியாகக் குந்தியிடம் பிறந்த வன் இவன். கவிஞர் இவனைத் தருமன் வாய்மொழியாக அறிமுகம் செய்யும்போது, 28. ഒ്. 4.57:252 - (79-81).