பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம் வீரத்தினாற் படைத்தோம்-செம்போர் வெற்றியினாற் படைத்தோம்; சக்கர வர்த்தி யென்றே-மேலாந் தன்மை படைத் திருந்தோம்: பொக்கென ஓர் கணத்தே-எல்லாம் போகத் தொலைத்து விட்டாய், நாட்டையெலாந் தொலைத்தாய்;-அண்ணே, நாங்கள் பொறுத்திருந்தோம்; மீட்டும் எமையடிமை-செய்தாய்; மேலும் பொறுத் திருந்தோம். துருபதன் மகளைத்-திட்டத் துய்நன் உடன்பிறப்பை இருபகடை என்றாய்;-ஐயோ! இவர்க் கடிமை யென்றாய்!" இவ்வாறு பேசுபவன் சகாதேவனை நோக்கி, இது பொறுப்ப தில்லை,-தம்பி! எரிதழல் கொண்டுவா; கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எரித்திடுவோம்.' என்று ஆணை இடுகின்றான். திரெளபதி படுகின்ற அவமா னத்தை, ஏனைய நால்வரும் பார்த்துக் கொண்டு வாளா இருக்க, இவன் ஒருவன்தான் துடிக்கின்றான். கண்ணன் திருவருளால் திரெளபதியின் சேலை வளரத் தொடங்குகின்றது. தொழும்பத் துச்சாதனும் கைசோர்ந்து 30. பா. ச. 5.66; 273.281 3 i. டிெ, 5.66: 281