பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感2 பாஞ்சாலி சபதம் இந்தச் சபதத்தினால் இவன் திரெளபதியின்மீது வைத் திருந்த கரை கடந்த அன்பும், இக்கொடுஞ் செயல்கட்கெல் லாம் காரணமாக இருந்த துரியோதன்மீதும், இச்செயல்களை நிறைவேற்றி வைத்த துச்சாதனன்மீதும் இவன் கொண் டிருந்த சீற்றமும் புலனாகின்றன. இக்காவியத்தில் அப்பழுக் கற்ற செயல் திறம் வாய்ந்த கதை மாந்தன் இவன். கி. அருச்சுனன்:- இவன் பாண்டவர்களுள் குந்திவயிற்றில் உதித்த மூன்றாவது மகன்;வீமனுக்கு இளையவன்.'வில்லுக்கு விசயன் என்று புகழ பெற்ற இவன்தான் தன்னுடைய விற்றொழில் திறனால் மச்சக் குறியை வீழ்த்தி திரெள பதியைக் கைப்பிடித்தவன். திருதராட்டிரன் அழைப்பை ஏற்று தருமன் அத்தினபுரத்திற்குச் செல்லத் தீர்மானித்ததை வீமனும் விசயனும், காமனும் சாமனும் ஒத்தவர்கள், அண்ணன் சொல்லைத் தட்டிப் பணிவுடன் மறுத்தபோது தருமன் பல நீதிகளையும் விதியின் விளையாட்டையும் எடுத்துரைத்தபின் இருவரும் பயணத்திற்கு ஒப்புக் கொள்ளு கின்றனர். இதுகாறும் அருச்சுனனைப் பெயரளவிங் சுட்டிய கவிஞர் சூதாட்டத்தின்போதுதான் தருமன் வாய்மொழி யாக நமக்கு அறிமுகம்செய்து வைக்கின்றார்: அருச்சுனனைப் பற்றித் தருமனின் மதிப்பீட்டையும் காட்டி விடுகின்றார். பார்த்தனைப் பணயப் பொருளாக வைக்கப்படும்போது தான் இவன் பெருமையையும் திறமையையும் நாம் காண முடிகின்றது. தருமன் கூறுவான்: 'சிங்க மறவர் தமக்குள்ளே-வில்லுத் தேர்ச்சியி லேநிகரற்றவன்-எண்ணில் இங்குப் புவித்தலம் ஏழையும்-விலை fடெனக் கொள்ளத் தகாதவன்