பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீற காவிய மாந்தர்கள் 33 'கண்ணனுக் காருயிர்த் தோழனாம்-எங்கள் கண்ணினும் சால இனியவன் வண்ணமும் திண்மையும் சோதியும்-பெற்று வானத்தமரரைப் போன்றவன்-அவன் எண்ணரு நற்குணம் சான்றவன்-புக ழேறும் விசயன் பணயங் காண்! என்ற கவிதைப் பகுதியில் அருச்சுனனைப்பற்றிய சொல் லோவியத்தைக் காண்கின்றோம். கண்ணனுக்கு ஆருயிர்த் தோழனாம்’ என்ற தொடரால் இவர்கள் நர-நாராயணர் களாகத் தோன்றி சீடனும் ஆசாரியனுமாக நின்று இவ் வுலகிற்கு வைணவர்களின் மூலமந்திரமாகிய திருமந்திரம்' தத்த வரலாற்றையும், பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னர்க் கண்ணன் சாரதியாக அருச்சுனனின் தேர்த்தட்டி லிருந்து கொண்டு கீதை உரைத்த வரலாற்றையும் குறிப்பாக நமக்கு அறிய வைக்கின்றார் கவிஞர். பாண்டவர்கள் அத்தினபுரம் செல்லும் பயணத்தின் போது சேனையுடன் ஒரு பொழிலிடையே தங்க நேரிடு கின்றது. மாலை நேரம். பார்த்தன் பாஞ்சாவியைத் தனி விடத்திற்கு இட்டுச் சென்று அவள் தன் தொடைமீது மெல்லச் சாய்ந்திருக்கப் பரிதியின் எழிலை விளக்குகின்றான். இந்நிகழ்ச்சி சித்திரகூட பர்வதத்தில் சீதைக்கு இராமன் பல காட்சிகளைக் காட்டும் நிகழ்ச்சியை நினைக்கச் செய் கின்றது. இங்கு நாம் அருச்சுனனைக்காவியத்தில் இரண்டாம் முறையாகச் சந்திக்கின்றோம்.கவிஞர்பார்த்தன் வாய்மொழி யாகச் சில அற்புதமான கவிதைகளை வழங்குகின்றார். இக் கவிதைகளுள் சிலவற்றை இந்நூலில் பிறிதோர் இடத்தில் கண்டு மகிழலாம். AASAASAASAASAASAASAAAS 33. டிெ 3.47:232-233