பக்கம்:பாடகி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்ை நீதிமன்றத்திலே மட்டும் அவர்கள் ஒரு துளிகூட நிதானம் இழக்கமாட்டார்கள்.

அன்று எனக்கு அழகுராணியாகத் தோன்றிய மங்களேஸ் வரி இன்று ஒரு அபலைபோல் தெரிகிருள். எவ்வளவு கொடிய மாற்றம்! ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருக்கும் வரை அவள் தெய்வமாக வணங்கப்படுகிருள்; ஆனல் அவள் மீது ஏதாவது சிறு களங்கம் கற்பிக்கப்பட்டு விட்டாலும் அவ ளது கடந்த காலத்துய்மைகள் அனைத்தும் கண்ணுடித் துண்டு களைப் போல் தூளாகி விடுகின்றன. w

நான் மனதுக்குள்ளேயே கற்பனை செய்து பார்த்துக்கொள் கிறேன். என் பக்கத்தில் அரியணையில் அமரவேண்டிய அன்னக் கிளி, கன்னத்தில் நீர்வடியக் கலங்கிப்போய் நிற்கிருள். என்னு டைய நாவசைப்பில்தான் இனிமேல் அவளது ஆயுளே இருக் கிறது. அவள் குற்றவாளியாகிவிட்டால் அவளது பரம்பரையே இனிமேல் தலையெடுக்க முடியாது மனிதர்களுக்குச் சிலநேரங் களில் சில பெரிய பதவிகள் மீதுகூட வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. இன்று எனக்கும் அந்த நிலைதான். நான் சேதுபதி யாக்கப்பட்டு அரசனுக இல்லாதிருந்தால் இ ன் று நான் அள வில்லா ஆனந்தம் அடைந்திருப்பேன். மங்களேஸ்வரியின் எதிர் காலம் என் தீர்ப்பில் அடங்கியிருக்க வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது அல்லவா!

அவள் யார்? சாதாரணக்குடும்பத்தில் பிறந்தவளா? மான மறவர் குடும்பத்தில் பிறந்த ஒரு மணிப்புரு பாளையப்பட்டின் தலைவனுகவும், கமுதிக் கோட்டை அதிபதியாகவும் விளங்கும் உறங்காப்புலி சேர்வையின் மனைவி அவள். உறங்காப்புலி என்ன எளிதான மனிதரா? அவர் ஒரு வேங்கை, எதிரிகளை உருட்டி, மிரட்டிப் பணியவைப்பதில் நிகரற்ற வீர புருஷன். அத்தகைய மறவர் திலகத்திற்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டவள் தான் மங்களேஸ்வரி; அப்பேர்ப்பட்ட வம்சத்தைச் சேர்ந்த ஒரு அதி பதியின் மனைவியின் நடத்தைமீது மறவர் நாட்டில் சந்தேகம் கிளம்பிவிட்டதே என்பதை எண்ணித்தான் நான் வெதும்பிக்

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/120&oldid=698911" இலிருந்து மீள்விக்கப்பட்டது