பக்கம்:பாடகி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கித்துக் கொண்டிருப்பது எங்கள் மது ரை அரண்மனைவரை பரவியிருந்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் என் மனம் கலங்கிவிடுவதுண்டு. ம து ைர அரண்மனையில் நடந்த பல விழாக்களுக்கு உறங்காப்புலி சேர்வை சேதுபதியோடு வந்திருக் கிறார், அப்போதெல்லாம் உறங்காப்புலியின் முகத்தில் இனம் தெரியாத துயரத்தின் சாயல் படர்ந்திருப்பதை நான் உணரா மல் இல்லை அவர் ம ன த் ைத முற்றுகையிட்டிருக்கும் முள் வேலியை அகற்றி எறிய என்னிடம் கண் கண்ட மருந்து இருக் கிறது என்று உறங்காப்புலிக்குத் தெரிந்தால் என்னைத்தான் அவர் சேதுபதிக்கு அடுத்தபடியாக மதிப்பார் என்றும் எனக்குப் புரிந்தது. ஆனல் அந்த ரகசியம் எங்கள் மதுரை மன்னருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இந்த விஷயத்தைப் பரம ரகசியமாக வைத்திருப்பது மது ைர அரண்மனையில் தொடர்ந்து ஒரு ராஜரீகமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட அரண்மனை ரகசியக்காப்பு, உறங்காப்புலி சேர்வை மீது எ ங் க ள் மன்னர் கொண்டிருந்த பாசத்தினுல் முதல் முறையாக மீறப்பட்டது.

மன்னர்கள் என்னதான் உற்ற நண்பர்களாக இருந்தாலும் ரகசியங்களைப் பரிமாரிக் கொள்ளமாட்டார்கள். சொந்த விஷயங்களைக் கூடப் பேசிக் கொள்ள மாட்டார்கள். உ. ற ங் காப்புலி விஷயத்தில் எங்கள் மன்னரும் சேதுபதியும் ம ன ம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். அரசர்கள் ஒரு வகையில் ரகசியக் காப்பு விஷயத்தில் பெண்கள் மாதிரிதான். பெண்கள் மற்ற வர்களின் ரகசியங்களை உடைப்பார்களே தவிர, த ங் க ள் ரகசியங்களை மூடி மறைத்துக் கொள்வார்கள். உறங்காப்புலி விஷயத்தில் மட்டும் எங்கள் மன்னருக்கு எப்படியோ இரக்கம் பிறந்துவிட்டது. சேதுபதி உறங்காப்புலி குழந்தை இல்லாக் குறையால் வரவரக் கூனிப் போய்க் கொண்டிருக்கிறார்’ என்று மதுரை மன்னரிடம் கூறிய நேரத்தில்கூட உடனே அதற்கு எங்கள் வைத்தியரிடம் ஒரு மாமருந்து இருக்கிறது என் று மதுரை மன்னர் கூறிவிடவில்லை. அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு சேதுபதி போன பிறகுதான் என்ன அழைத்து விவரத்தைக் கூறினர்.

14 i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/142&oldid=698936" இலிருந்து மீள்விக்கப்பட்டது