பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எங்கள் கணபதி

தும்பிக்கைபோல் சுழிபோட்டு
எங்கள் கணபதி - நாங்கள்
தொடங்குகின்றோம் எச்செயலும்
எங்கள் கணபதி
நம்பிக்கைகள் கூப்புகிறோம்
எங்கள் கணபதி - நாங்கள்
நலம்பெறவே அருள்புரிவாய்
எங்கள் கணபதி.



கந்தனுக்கு முன்பிறந்த
எங்கள் கணபதி - நல்ல
கருத்தைநெஞ்சில் விதைத்திடுவாய்
எங்கள் கணபதி
முந்திமுந்தி வந்துநிற்கும்
எங்கள் கணபதி - எங்கள்
முயற்சிஓங்க அருள்புரிவாய்
எங்கள் கணபதி


10