பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாடுங் குயில்கள் வேலையிழப்பும் மீட்பும் கவிதையில் தோய்ந்த நெஞ்சம் பிற பணிகளில் ஈடுபடாது என்றும் சோம்பியிருக்கும் என்றும் சிலர் கூறுவர். ஆளுல், கவிஞர் வேதநாயகரோ அதற்கு மாறுபட்டவர். ஏற்றுக்கொண்ட பணியில் இவர் சுறுசுறுப்பாகவே விளங்கினர்; எழுத்து வேலே மிகுதியாக இருந்தமையால், தமக்குத் துணையாக ஒருவரை அமர்த்திக்கொண்டு, தம் பணியினைக் குறையின்றிச் செம்மையாகச் செய்துவந்தார். இச் சமயத்தில் மேஸ்தர் டேவிட்சன் என்பவர் நீதிபதியாக இருந்தார். அவர் வேதநாயகரின் கடமையுணர்ச்சியை அறிந்து மகிழ்ந்து இவரிடம் அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். அப்பொழுது எப்படியோ தமிழ்நாட்டில் சமயப் பூசல் காரணமாகக் கலகம் ஏற்பட்டது. கலகத்தில் ஈடுபட்ட இரு சமயத்தாரும் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத் திற்கு வந்தது. அங்கு இவ் வழக்கு முடிவு பெருத காரணத்தால் மாநில நீதி மன்றத்திற்கு மாற்றப் பட்டது. அதனல் இரு சமயத்தாரும் கொடுத்த விண்ணப்பங்கள், வழக்கு நடைபெறும் பொழுது சொல்லப்படும் கருத்துகள் ஆகிய அனைத்தையும் மொழிபெயர்க்க வேண்டிய பொறுப்பு வேதநாயக ரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேதநாயகர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்தையும் நன்முறையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, மேஸ்தர் டேவிட்சனிடம் கொடுத்தார்.