பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் , 49 எளிமை வாழ்வு எவரேனும் தம்பால் வந்து, பிறரைப்பற்றிக் குறைகள் சொன்னல், அவற்றைச் செவிகொடுத்துக் கேட்கமாட்டார் ; தாமும் பிறரைப்பற்றி அவர் இல்லாதபொழுது குறைகள் பேசமாட்டார்; குறை கண்டால் நேரிலேயே அன்பாக எடுத்துச்சொல்லி, அவரைத் திருத்துவார். வெளிப்பகட்டை இவர் ஒரு சிறிதும் விரும்பியதில்லை ; எல்லாவற்றிலும் எளிமையையே விரும்பினர். ஆடையில் எளிமை, தோற்றத்தில் எளிமை, பேச்சில் எளிமை, எழுத்தில் எளிமை, பழகுவதில் எளிமை அனைத்திலுமே எளிமைதான். இவரிடத்தில் எளிமை குடிகொண்டிருந்தம்ை யால், ஆடம்பரத்தை விரும்பவில்லை , ஆடம் பரத்தை விரும்பாமையால் புகழையும் விரும்ப வில்லை. புகழை விரும்பாத காரணத்தால் இவரைப் பாராட்டப் பலர் அழைத்தும் இவர் செல்லவில்லை ; ஆயினும், தவிர்க்கமுடியாத சில இடங்களுக்கே சென்று வந்தார். யார் புகழை வெறுத்து ஒதுக்கு கிருர்களோ, அவர்களைப் புகழ் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே யிருக்கும். புகழ் அவர்களைவிட்டு விலகவே விலகாது. தன்னை வெறுத்து ஒதுக்கிய கவிமணியைப் புகழ் சூழ்ந்துகொண்டே யிருந்தது. உயர்பண்பு சுற்றுச்சூழலை அறிந்து நடந்துகொள்ளும் பண்பும் இவரிடம் இருந்தது. ஒரு சமயம் திருமண விருந்து ஒன்றில் இவர் கலந்துகொள்ள நேர்ந்தது.