பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாடுங் குயில்கள் ஏற்பட்டது. இவர் வண்டமிழிற் கவிதைகள் வரைந்து மகிழ்வார். இவரது பாட்டியற்றும் திறன் கண்டு தமிழன்னையின் தனிமகன் என்று அனைவரும் இவரைப் பாராட்டினர். பாரதியாரின் பாட்டுத்திறம் கண்டு பாராட்டிப் புகழ்ந்தவர் பலர் ; இளமையில் இவ்வளவு புகழா என்று இக ழ் ந் த வ ர் சிலர். பாரதியாருடைய நண்பர்களுள் காந்திமதிநாதப் பிள்ளை என்பவரும் ஒருவர். அவர் பாரதியாரிடம் அன்பு கொண்டிருந் தாலும், அவர் மனத்தில் அழுக்காறு அரசோச்சியது. ஒருநாள் அவர் பாரதியாரைத் தாழ்த்த எண்ணி, “பாரதி சின்னப் பயல் -என்னும் ஈற்றடியைக் கொடுத்து ஒரு வெண்பாப் பாடச் சொன்ஞர். பாரதியாரா அதற்கு அஞ்சுபவர்? இவர் அந்த இறுதியடியையே தக்க கருவியாகக் கொண்டு காந்திமதிநாதப் பிள்ளை நாணுமாறு செய்தார். இதோ அந்த வெண்பாவின் இறுதி இரண்டடிகள், 'காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல்: 'கருமேகம் போல மனம் இருண்டு கிடக்கும் காந்திமதி நாதனைப் பார்! அதி சின்னப் பயல்: (மிகச் சிறியவன்)' என்பது இதன் பொருள். காந்தி மதிநாதன் வெட்கித் தலைகுனிந்தார். திருமணம் பாரதியாருக்குப் ப தி னே ந் தா ம் ஆண்டு தொடங்கியது. இவர்தம் தந்தையார் பாரதி

யாருக்குத் திருமணம் செய்துவைக்கத் துணிந்தார் ;