பக்கம்:பாடு பாப்பா.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




கை வளையல் கை வளையல்
கண்ணாடி வளையலாம்!
கல கலக்கும் கிலு கிலுக்கும்
கண்ணாடி வளையலாம்!

சின்னப் பெண்கள் சிரிப்பது போல்
ஒலியெழுப்பும் வளையலாம்!
சிவப்பு பச்சை ஊதாவென்று
சிலுசிலுக்கும் வளையலாம்!

வளையல் காரர் வந்து விட்டார்
ஓடியோடி வாருங்கள்
வளையல் வாங்கிப் போட்டுக் கையை
நீட்டிநீட்டிப் பாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/22&oldid=1318909" இலிருந்து மீள்விக்கப்பட்டது