பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 வாயைத் திறக்காமல் வந்தவளேப் பாராமல் பாயிற் புரண்டே பகற்கனவு காணுகின்றீர்!

  • 来 来 அத்தானும் இல்லை! அடிபோடி நீகிழவி! பொத்தானும் நானில்லை! பொக்கைவா பன்நானே! சித்(து):இரை நான்தேடிச் செந்தமிழ்நூல் கையெடுத்தேன்! சித்திரை வந்ததடி செந்தேன் மொழியாளே! செளமியத்தை நாம்கடந்தோம்! சாதாரணகண்டோம்! கொவ்வை இதழாளே! குத்து விளக்கொளியே! சாதாரணமான தாழில் குடிசைமுதல் சாதா ரணவந்து சார்ந்ததடி வாழ்த்துரைப்போம்! நீர்நிலைகள் எங்கும் நிறைந்தனவே நீர்ப்பூக்கள்! ஊர்நிலைகள் எங்கும் உணவுக்கோ பஞ்சமில்லை! கார்பொய்த்துப் போனலும் கண்கள் கலங்காதே! நீரை நிரப்புநிலை சாதாரண நிலையாய் ஆளும் அரசு நமக் காக்கி அளித்திருக்கக் கோளும் குறைப்பேச்சும் கொண்டிங்கே வாழாமல் அன்பும் அறனும் அடைவதுதான் நல்வாழ்க்கை! பண்பும் பயனும் அதுவென்ருர் வள்ளுவனர்!

அன்பு கற்ருேன்றி மண்தோன்றிக் கார்தோன்றி மண்ணிடையிற் புற்ருேன்றிச் சின்ன புழுத்தோன்றி வந்தமுதல் அன்பின் வழிய துயிர்நிலை ஆமென்றே இன்பம் அடைந்தே இனப்பெருக்கம் கண்டதுயிர்1 அன்பின் உணர்விற்கே ஆட்பட்ட பின்புதான் என்புதோல் போர்த்த உயிரே எழுந்ததுவாம்! கார்முட்டும் நீண்ட கவின்சேரி மலைச்சாரல் சீர்முட்டும் பூக்கள் சிரித்தனவே யாருக்காம்?