பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 (ஆசிரியப்பா) எனதரும் ஆசான் இளைய மாணவர்க்(கு) எழுதிய இன்னிசை அகவல் படிப்பேன்; கேட்டுப் பயனடை வீரே! இவ்விடத்தில் கவிஞரேறு வாணிதாசர், குயிலில் வெளி யாகியுள்ள, காலையில் எழுந்து', 'நல்லாசிரியர்', 'நடுப்பகல் உணவு', 'பள்ளிக்கூடம்’, ‘மால் வேளையில்', 'பாங்குடைய' எனத் தொடங்கும் பாவேந்தர் பாடல்களைப் பாடிக் காட் டினர்.) (வெண்பா) எல்லோர் தமக்கும் எடுத்தளித்த முக்கனியாம் நல்ல படியென்ற நற்பாடல்-வல்ல கவியரசர் உள்ளக் கருத்துணர்ந்து கற்ருல் புவியரச ரும்போற்று வார்! (நூலைப்படி-சங்கத் தமிழ்-நூலைப்படி-முைறப்படி, எனத் தொடங்கும் பாவேந்தர் பாடலைக் கவிஞரேறு வாணிதாசர் இவ்விடத்தில் பாடிக் காட்டினர்.) முடிவுரை - (எண்சீர் விருத்தம்) செத்தபின் விழாவெடுக்கும் இந்த நாட்டுச் செல்வர்காள்! அரசியல்சீர் வாய்க்கப் பெற்றிர்! - பத்துப்பாட் டென்கின்ற தொகைநூல் செய்தோர் பஞ்சனேயில் படுத்திருந்தா இன்பம் துய்த்தார்? கொத்துப்பூத் தேன்சொரியும் தமிழ்ப்பாப் பாடிக் கொடுத்தோரே பல்வளமும் கொடுத்தோர் ஆவார்! புத்துலகம் அவர்படைப்பு: கவிஞர் வாழ்ந்தால் புதுப்பொலிவில் எந்நாளும் சிறக்கும் நாடே!