பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

காற்றாகப் பறக்கின்ற குதிரை ஏறிக்
கண்ணகன்ற இடம்வந்து நமையெ திர்த்த
மாற்முனைப் புறங்கண்டோம் முன்னாள்! இன்றோ
வாலாட்டிப் பார்க்கின்றான் பாகித் தானும்!
கூற்றொத்த தாயகத்து வீரர் முன்னர்க்
குறுந்தாடிப் பாகித்தான் துச்சம்! துச்சம்!
போற்றிடுவோம் தாயகத்தின் வெற்றி! வாழ்க!
போர்ப்பரணி புதுப்பரணி பாடு வோமே! 11

வெள்ளம்போற் காலாட்கள் படை நடத்தி
வெற்றிகண்ட தாயகத்தின் மறவர் கூட்டம்
குள்ளர்கள் செஞ்சீனர் மிரட்டல் கேட்டுக்
குறுநகையே செய்வதலால் வேறென் செய்வோம்!
தள்ளாத வயதினிலும் மகளைக் கூலித்
'தாயகத்தைக் காக்கவெழு; செல்க!' என்னும்
உள்ளத்தார் நம்தாய்மார்! முரசறைந்தே
ஊரெங்கும் போர்ப்பரணி பாடு வோமோ! 12

பனிப்படலம் பகலவன்முன் என்ன ஆகும்?
பாகித்தான் பாரதத்தில் நுழைந்து பார்த்தான்!
தனியொருவன் மாற்றானின் படையை யெல்லாம்
தடுத்தெதிர்த்து முறியடித்தான் வெற்றி! வெற்றி!
இனியஞ்சோம் எந்நாட்டு மிரட்ட லுக்கும்!
எவர்வரினும் எதிர்நின்றே ஒருகை பார்ப்போம்!
கனிகுலுங்கும் பழக்காட்டுக் குயிலைப் போலக்
கவிஞர்காள்! போர்ப்பரணி பாடு வோமே! 13

கடலோடிக் கலஞ்செலுத்தி வெற்றி கண்ட
கன்னெஞ்சப் பெருமறவர்; அன்னோர் தந்த
உடலோடு வாழுகின்றோம் பாகித் தானை
ஒடுக்குவது நமக்கென்ன மலையா? வெற்றி!
அடலேறு நம்மறவர்! தரையில் வானில்
அஞ்சாது போர்புரிவர்! வாழ்க! வாழ்க!