பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நீர்பாயும் மடையோரம் வந்திருந்து பாtiம் நீலமலர், சிறுகெண்டை மனைவிவிழி காட்டும்; கார்நெல்லோ குழல்காட்டும்; கதிர்காட்டும் நெற்றி: காற்றினிலே அசைந்தாடும் வாழைபலா மாவும் ஊரினிலே இல்லத்தாள் பரிவோடே ஊட்டும் உணவுதரு நற்சுவையை வயலிருந்து கூட்டும்: ஏர்பாயும் வேளாண்மை வயலினிலே மக்கள் எதிர்பார்க்கும் இன்பமெலாம் குறைந்திருக்கப் r (போமோ? 23 (வேறு) தமிழ்போல இனிக்கின்ற வாழை மாவைத், தனிவீட்டாள் சொற்போன்ற பலாப்ப ழத்தை, அமிழ்தொத்த குழந்தைகளின் மழலைப் பேச்சாம் அருந்தேனே, இளநீரை விளைப்போம்! மூக்கில் கமழ்கின்ற பூவளர்ப்போம்! அந்தப் பூக்கள் காட்டுகின்ற கண்களிலே கண்ணை வைப்போம்! நமையாரே எதிர்த்திடுவார்? எந்த நாட்டு நரியினமும் வாலறுந்து நசிந்து போமே! 24 தோட்டத்துக் காய்கறிகள், கொத்துக் கொத்தாய்த் தொங்குகின்ற பழமரங்கள் மனத்தில் மூளும் வாட்டத்தைப் போக்காவோ? வாழ்வில் தோன்றும் வறுமையினை நீக்காவோ? பயிர்வி ளைத்தே ஈட்டத்தைச் சேர்த்திடுவோம்; இதுநம் வேலை இல்லையெனில் பிறநாட்டிற்கையை ஏந்தி நாட்டிற்குப் பழிசேர்க்கும் கயவர் ஆவோம்! நம்நாடு நிறைவுபெற உழைப்போம் நாமே! 25