பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாடகத்தைக் கண்கண்டு நன்குணர்ந்து கொண்டிதனல் நாடகத்தை மீட்கவே நம்மண்ணு கைகொடுத்தார்! நல்லரசு வாழ்க! நமதரசு வாழ்கவே! பல்வளனும் பெற்றுப் பசிநீங்கி வாழ்ந்திடுவோம்! தொல்லை களேவோம்! சுவைத்தமிழை நாம்காப்போம்! சொல்லை மதிப்போம்! திகழ்மலைத்தோள் அண்ணுவின் பாடு சிறக்கப் பயன்சிறக்கப் பல்லாண்டு நீடு சிறக்க நிலைத்து! Ο நாள்: 17.9.1967, இடம்: சென்னை புரிசை தருமப் பிரகாச மண்டபம்சென்னை 44வது வட்ட முத்தமிழ் மன்றத்தார் நடத்திய அண்ணுவின் 59வது பிறந்த நாள் விழாக் கவியரங்கம். தலைவர்: தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு. கருணுநிதி. தலைப்பு: அறிஞர் அண்ணு-நாடக ஆசிரியர். 1. அண்+நா உள்நாக்கு. 2. நாடு-அகத்து எனப் பிரித்துப் பொருள் கொள்க. 3. தமிழ்நாட்டரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு. கருணநிதி. . 4. கவிஞரின் இரண்டாம் மகள் வயிற்றுப் பேத்தி. 5. நாடு + அகம் + ஆசிரியர் - நாட்டில் உள்ளோர் மனத்தைத் திருத்தும் ஆசிரியர். - - 6. ஆசு-இரிவார் அண்ணு-குற்றம் நீங்கியவராகிய அண்.ை