பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியின் புனிதப் பொன்உடலில் கயவனின் குண்டு பாய்ந்ததுமே சாந்தம் தவழும் முகத்துடனே சாய்ந்தனர் ஹேராம் என்று சொல்லி. கோபுரம் கீழே சாய்ந்ததுபோல் குலுங்கும் பழமரம் வீழ்ந்ததுபோல் பாபுகம் காங்தி புனிதஉடல் பாதகன் செயலால் சாய்ந்ததையோ ! தங்க கிலவு மறைந்தது போல் சட்டென இன்னிசை கின்றதுபோல் மங்கல தீபம் அணைந்ததுபோல் மாந்தருள் தெய்வம் மறைந்ததையோ ! அறவழி காட்டிய பேரொளியை, அன்பு வடிவாம் மாமணியை, குறளிலே கூறிய பண்பனைத்தும் கொண்டவர் தம்மைக் கொன்று விட்டான் ! தெய்வ மகளுப்ப் பிறந்தவரை, தேசப் பிதாவாய்த் திகழ்ந்தவரை, வையகம் போற்றிட வாழ்ந்தவரை வஞ்சகன் சுட்டுக் கொன்றுவிட்டான் ! 144