பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழால் காந்திமகான் புகழ்பாடி, காந்தியுகக் கவிஞர் எனப் புகழ்பெற்றவரும், தமது பாட்டுத் திறத்தால் நாட்டு விடுதலைக்கு நற்பணி புரிந்தவருமாகிய நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்கள், உடல் சரியில்லாத நிலையிலும் என் முயற்சியைப் பாராட்டி ஆசி அருளிஞர்கள். "கிராம ராஜ்யம் அமைய வேண்டுமெனக் காந்திஜி கனவு கண்டார். அத்தகைய கிராம ராஜ்யத்தின் கவிச் சக்கரவர்த்தியாக விளங்கவல்ல கொத்தமங்கலம் கப்பு அவர்கள், காந்தி மகான் கதை'யைப் பட்டி தொட்டி களிலெல்லாம் மனமுருகப் பாடி மக்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர். அவர்கள் அன்போடு இந் நூலுக்கு வாழ்த்து வழங்கியிருக்கிருர்கள். தமது பேச்சாலும், எழுத்தாலும், நினைத்தவுடன் கவி பாடும் திறத்தாலும் தெய்வத் தொண்டும், செந்தமிழ்த் தொண்டும் இடையருது செய்துவருபவரும், நல்ல பல எழுத்தாளர்களை உருவாக்கியவருமாகிய 'கலைமகள்' ஆசிரியர், செந்தமிழ்ச் செல்வர் திரு கி. வா. ஜகந்நாதன் அவர்கள் முன்னுரை அளித்திருக்கிரு.ர்கள். - நாடுபோற்றும் இந்நல்லவர்களின் வாழ்த்துக்கள் மேன் மேலும் நற்பணிபுரிய எனக்கு ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை. - வழக்கம்போல், அச்சுக்குக் கொடுப்பதற்கு முன்பு இப் பாடல்களை நண்பர்கள் சிலரிடம் கொடுத்துப் படித்துப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். கவிஞர் சோமு, கவிஞர் பல்லடம் மாணிக்கம், சந்தக் கவிமணி தமிழழகன், புலவர் அ. அப்துல் கரீம், கவிஞர் தேவநாராயணன், என் உடன் பிறந்த தம்பிபோல் என்றும் உதவிவரும் திரு. தம்பி சீனிவாசன் ஆகியோர் தங்களது பல வேலைக்களுக்கிடையே இப்பாடல்களைப் படித்துப் பார்த்துப் பல பயனுள்ள யோசனைகளைக் கூறினர்கள். 11