பக்கம்:பாட்டுத் திறன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g6 பாட்டுத் தி றன் பிற உள்ளக்கிளர்ச்சிகள் : அச்சம், சினம் போன்ற உள்ளக் கிளர்ச்சிகள் நிகழும் பொழுது ஏற்படும் உடல் மாறுதல்களைப் போன்ற மாறுதல்கள் பிற உள்ளக்கிளர்ச்சி நிகழுங்கால் ஏற்படு கின்றனவா? இத்துறையில் மேற்கொள்ளப்பெற்ற ஆராய்ச்சி களால் பாலுணர்ச்சியில் மட்டிலும் உடல் மாறுதல்கள் ஏற்படு கின்றன என்றும். ஏனைய உள்ளக்கிளர்ச்சிகள் ஏற்படுங்கால் திட்டமான மாறுதல்கள் யாதொன்றும் நிகழ்வதாகத்தெரிய வில்லை என்றும் முடிவு கண்டுள்ளனர். அடித்தலை முன்சுரப்பி யில் ஊறும் இயக்க நீர்கள் புணர்ச்சி நிலையையும் பாலறி குறிகளையும் இயக்குகின்றன என்று முன்னர்க் கூறினோம் அன்றோ? மாங்காய்ச் சுரப்பிகளின் புறணி உடன் நிலைப் பாலறி குறிகயைள அடக்கியாள்கின்றது என்பதையும் சுட்டியுரைத் தோம். காதல் உணர்ச்சி ஏற்படுங்கால் நம் உடலில் கிளர்ச்சி ஏற்படுகின்றது என்பது உண்மையேயாயினும், அக்கிளர்ச்சி அச்சம் அல்லது சினம் ஏற்படுங்கால் உண்டாகும் கிளர்ச்சியினும் வேறுபட்டது. மனித இயற்கையின் மிகச் சிக்கலான அமைப்பும், நாகரிகமடைந்த சமூகம் பால் துடிப்பின்மீது சுமத்தியுள்ள கட்டுப்பாடுகளும், மனிதனிடம் இவ்வுந்தல்' செயற்படுவதைப் பல்வேறுபட்ட நிலையில் தெளிவற்றதாக்கி இதை ஆராய்வதில் சிரமத்தை விள்ைவிக்கின்றது. சுரப்பிச்சாறுகளால்தான் காதல் விடாய்" எழுகின்றது. ஆணின் விரையி"லுள்ள சில உயிரணுக்களில் சுரக்கும் ருேம், பெண்ணின் குற்பை'களில் சுரக்கும் நீரும் இவ்விடாயை எழுப்பு கின்றன. இவை குருதியோட்டத்தின் வழியாக மூளைக்குச் சென்று சில துலங்கல்களை விளைவிக்கின்றன. இதனால் எதிர் பால் வேட்கையும், அதனால் இணைவிழைச்சுப் புரிவதற்கேற்ற கடத்தையில் கொண்டு செலுத்தும் இணைபயிலும் செயலும் நிகழ்கின்றன. உரம் பெற்ற உடலமைப்பே கண்கவர் வனப்பாகும். ஆதலால், உரம்பெற்ற உடலமைப்பே பெண்கள் விரும்புகின்றனர். இந்த இயற்கை இயல்பினாலேயே இனம் காக்கப்பெறுகின்றது. உடலுரம் பெற்றவர்களே தங்தையராக விளங்கத் தேர்ந்தெடுக்கப் பெறுவதால் அவர் வழி வரும். மரபினரும் உடலுரம் பெற்று விளங்கி முன்னடைகின்றனர். 89. உந்தல் Drive. 40. விடாய். Appetite. 41. *** - Teste. - 42. eảsou - Ovary. 48. stos udsass - Courting,