பக்கம்:பாட்டுத் திறன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 99 தன்மைகள் ஆகியவை அவனுடைய இயல்பான உளப்போக்கு களுடன்" சேர்ந்து அவனுடைய மீப்பண்பாக வடிவெடுக்கின்றன. மேலே நிலைத்திருக்கும் உள்ளக்கிளர்ச்சி மனtலையைக் குறிப் பிட்டோமன்றோ? இத்தகைய மன நிலையில் மாற்றங்கள் இருக்கலாம்; ஆனால், அவை மனிதருக்கு மனிதர் கிட்டத்தட்ட நிலையான வேற்றுமைகளுடன் காணப்பெறக்கூடும். ஒருவரிடம் இத்தகைய மனநிலை வாரக்கணக்கில், ஆண்டுக் கணக்கில், நிலையாக அமைந்து அஃது ஒரு சிறப்பியல்பான மனரீலையாகக் காட்சி யளிக்கலாம். இத்தகைய நிலையான மனநிலையேஉட்பாட்டின் நீட்சியே-மீப்பண்பு என வழங்கப்பெறுகின்றது. இதிலிருந்து அமைதியான பின்னிலை உள்ளக்கிளர்ச்சியே மீப்பண்பாகும் என்பதும் பெறப்படுகின்றது. ஹிப்போ கிரேட்டஸ்' என்ற யவன அறிஞர் நமது உடலுக்குள்ளே சில ர்ேப்பொருள்கள் மிக்கிருப்பது காரணமாக மனநிலையும் மாறும் என இரண்டாயிரம் யாண்டுகட்கு முன்னரே கூறியுள்ளார். இந்தக் கொள்கை நம் நாட்டு அகத்தியர், தேரையர் முதலியோர் கருத்துக்கும் ஒத்திருக்கக் காண்கின்றோம். ஒவ்வொருவருக்கும் பல பல பண்புகள் இருப்பினும் அவற்றுள் ஒரு சிலவே மேலோங்கித் தோன்றும். முன்கோபக்காரன், வேடிக்கைக்கர்ரன் என்ற உலக வழக்குகளை காம் அறிவோம். இங்குச் சினமும் நகையும் மிக்குத் தோன்றுவதால் அவை மீப்பண்புகள் என வழங்கப்பெற்றன. இழிவழக்கில் சுடுமூஞ்சி," அழுமூஞ்சி," துரங்குமூஞ்சி" சிரிச்சமூஞ்சி' என இப் பண்பு களை மக்கள் வழங்குவதை நாம் அறிவோமன்றோ? இன்று தாம்பிலாச் சுரப்பிகளின் சாறுகள் உண்டாக்கும் விளைவுகளை அறிந்த நமக்கு இக் கருத்துகள் ஓரளவு தெளிவாகியுள்ளன என்று சொல்லலாம். மக்கள் அகமுகர்," புறமுகர்" என்றெல் லாம் வகைப்படுத்தப் பெறுவதெல்லாம் இக்கருத்துகளை 49. *-arúGurée - Tendency. 50. gsúGura Gra--sic - Hippocrates. 51. s.Gopé58 - Choleric Temperament. 52. -siegep és 3 – Melancholic Temperament. 53. sréig sp 58 - Phlegmatic Temperament. 84. àf** epôé - §anguine Temperament. 58. -* *gpsi • Intraverts, , 56. upgp*# - Extroverts.