பக்கம்:பாட்டுத் திறன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f00 பாட்டுத் திறன் யொட்டியே என்பது நமக்குத் தெரியும். ஒருவர் கவிதையைச் சுவைப்பது ஓரளவு இப்பண்புகளைப் பொறுத்துள்ளது. பற்றுகள் : பல உள்ளக்கிளர்ச்சிகளின் சேர்க்கையே மேலிடனா மனஉணர்ச்சி"யாக மாறுகின்றது என்றுகூறுவர் உளவியலார். ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது பொருள் மீது நம்முடைய கவர்ச்சிகளும் சிலவகையான உள்ளக்கிளர்ச்சிகளும் திரண்டு அமையும்போது பற்று உண்டாகின்றது. மேலீடான மன உணர்ச்சியை எழுப்பும் பொருளைக் கதிரவனாகவும் உள்ளக் கிளர்ச்சிகளைக் கோள்களாகவும் உருவகப்படுத்திக் கூறுவது முண்டு. நாம் நம் காட்டினை விரும்புகின்றோம். அதன் கலத்திற்கு இடையூறுகள் தோன்றினால் அஞ்சுகின்றோம். அதன் வீரர்கள், அறிஞர்கள், சமயாச்சாரியார்கள், சீர்திருத்த வாதிகள் ஆகியோர்களைப் போற்றுகின்றோம். காட்டுக்கொடி, நாட்டுவாழ்த்து போன்றவற்றிற்கு அதிக மதிப்பு தருகின்றோம். காட்டின் பரப்பிலும், பண்டைய பெருமையிலும், தற்காலம் அதன் சாதிப்பிலும் பெருமிதம் கொள்ளுகின்றோம். இந்த உள்ளக்கிளர்ச்சியின் சேர்க்கை காட்டுப்பற்றைக் குறிக்கின்றது. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் காடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே " விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கணம் மேனாள் வட மொ ழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ?53 என்பன போன்ற பாட்டுகள் காட்டுப் பற்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. இங்ங்னமே, மொழிப்பற்றினை அடிப் படையாகக்கொண்ட பாடல்களும் உள்ளன. கடுக்க வின்பெறு கண்டனும் தென்திசை கோக்கி அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு விடுக்க ஆரமென் கால் திரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ?" 57. மேலீடான மன உணர்ச்சி Sentiment, 58. பாரதியார்: கவிதைகள்--செந்தமிழ்நாடு.1. 59. திருவிளை - திரு நாட்டுச் சிறப்பு- செய் , 56, 80. திருவிளை - திருநாட்டுச் சிறப்பு-செய். 55