பக்கம்:பாட்டுத் திறன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 سنة سلبي உள்ளக்கிளர்ச்சி பற்றிய சில கொள்கைகள் உள்ளத்தை ஆராய முற்பட்ட சில உளவியலறிஞர்கள் உள்ளக்கிளர்ச்சி பற்றிய சில கொள்கைகளை கிறுவியுள்ளனர். இவை கவிதையநுபவத்திற்கு ஓரளவு துணை புரிபவை; கவிதை யநுபவம் எங்கனம் நம்மிடம் உண்டாகின்றது என்பதை அறிவ தற்கு ஒரளவு ஊன்றுகோல்களாக இருப்பவை. இவை போக, கவிதையதுபவத்தைப் பற்றிய பழந்தமிழர் கண்டவையும் உள்ளன. இவைபற்றி இந்த இயலில் சிறிது ஆராய்வோம். உளவியலறிஞர்கள் கண்டவை: உடலியல் அடிப்படையில் உள்ளக்கிளர்ச்சிகளை ஆராய்வோர் சில முக்கிய உள்ளுறுப்புக் களையும் தன்னாட்சி நரம்பு மண்டலத்தையும் ஆராய்வதுடன் திருப்தியடைவதில்லை; ஆனால் அவர்கள் உள்ளக்கிளர்ச்சி நேரிடுங்கால் மூளை என்ன செய்கின்றது என்று ஆராய முனைக் தனர்.இந்த அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் உள்ளக்கிளர்ச்சிகள் பற்றிய சில கொள்கைகளை நிறுவினர். அவர்கள் நவீன அறுவை மருத்துவம்பேற்றிய யுக்தி முறைகளை யும் மின்னாற்றல் யுக்தி முறைகளையும் கையாண்டு உள்ளக் கிளர்ச்சிகள் ஏற்படும் பொழுது மூளை முழுவதும் செயற்படு கின்றதா, அன்றி அதன் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டி லும் பங்குபெறுகின்றனவாஎன்று உறுதிப்படுத்த முனைந்தனர். இதனால் நம்பத்தக்க சில வியத்தகு முடிவுகளையும் கண்டனர். உள்ளக்கிளர்ச்சி பற்றி அவர்கள் கண்ட கொள்கைகளைச் சிறிது ஆராய்வோம். 1. Garsire»» - Theory. * அறுவை மறுத்துவம் surgery, 3. ujśst g sop - Technigưe,